/

இயலாமை நீங்கி ஆண்மையை அற்புதமாகப் பெருக்க உதவும் மூலிகை உணவு!

கானாம் வாழைக் கீரை, சீரகம் இரண்டையும் நல்லெண்ணெய் விட்டு நன்றாக வதக்கி அதனை விழுதாக அரைத்து தோசை மாவுடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:26 am

கோவை பாலா

கானாம் வாழைக் கீரை தோசை 

தேவையான பொருட்கள்

கானாம் வாழைக் கீரை - 100 கிராம்
சீரகம் - ஒரு ஸ்பூன்
தோசை மாவு - அரைக் கிலோ
நல்லெண்ணெய் - சிறிதளவு

செய்முறை : கானாம் வாழைக் கீரை, சீரகம் இரண்டையும் நல்லெண்ணெய் விட்டு நன்றாக வதக்கி அதனை விழுதாக அரைத்து தோசை மாவுடன் கலந்து வைத்துக் கொள்ளவும். இதனை தோசையாக வார்த்து சாப்பிட்டு வந்தால் மிக ருசியாக இருக்கும்

பலன்கள் : இயலாமை உள்ளவர்கள் ஆசையாக இந்த தோசையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இயலாமை நீங்கி ஆண்மை பெருக்கி இல்லறம் இனிக்கும். மேலும் நரம்புக் கோளாறு, பயம், நடுக்கம் போன்ற குறைபாட்டை சீர் செய்யும் அற்புத மூலிகை உணவு கானாம் வாழைக் கீரை தோசை.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.