டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தலை, உள்ளங்கால் மற்றும் உள்ளங்கை பகுதியில் உண்டாகும் அதிகப்படியான வியர்வையை கட்டுப்படுத்த

புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:40 pm

கோவை பாலா


 
சத்துக்கள் : புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை `பி' காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் இருக்கின்றன .

தீர்வு : தேங்காய் (200 கிராம் ) , கோவக்காய் (10) இவை இரண்டையும் மிக்ஸியில் போட்டு அதனுடன்  தண்ணீர் நிறைய சேர்த்து அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சம் குடித்து வரவும். தினமும் ஒரு வேளை தேங்காய் பால்  தலா (100 மி.லி) அல்லது கொப்பரைத் தேங்காய்  எவ்வளவு சாப்பிடமுடியுமோ  சாப்பிட்டு வரவும். இதனோடு காலை மாலை என இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு செக்கில் ஆட்டிய  சுத்தமான தேங்காய் எண்ணெய்யை வாயில் ஊற்றி நன்றாக கொப்பளித்து பின்பு அப்படியே முழுங்கவும். இலந்தை இலையின் சாறெடுத்து அதனை உள்ளங்கை மற்றும் உள்ளங் கால்களில் பூசி வந்தால் அங்கு அதிகமாக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.