குரலில் திடீர் மாற்றம், தொடர் இருமல், குரலில் கரகரப்பு, இருமும் போது ரத்தம் வருதல், மூச்சடைப்பு வீசிங் பிரச்னைகள், உணவு அல்லது நீர் விழுங்குவதில் சிரமம், விழுங்கும் போது வலி, தொண்டையில் அடைப்பு போல் தோன்றுதல் நாக்கை அசைப்பதில் சிரமம் ஏற்படுதல். உடலில் கட்டி தோன்றி அது குணமடையாமல் இருத்தல், காரணம் இல்லாமல் உடல் எடை இழத்தல், கண்கள், தொண்டை, கழுத்து, வாய்ப் பகுதிகளில் வீக்கம், காது வலி போன்றவை இதன் அறிகுறிகள். இத்தகைய அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை தொடங்க வேண்டும். இல்லையென்றால் 7 செண்டிமீட்டர் வரை வளரக் கூடிய அந்த புற்றுநோய்க் கட்டி தொண்டையில் வளர்ந்து, அங்கேயே உறைந்துவிடுவதுடன், உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி உயிருக்கு அபாயத்தை விளைவிக்கும்.