முகத்தின் அழகை வெளிப்படுத்துவது சிரிப்புதான். நீங்கள் பேரழகு கொண்டிருந்தாலும் முகத்தில் சிரிப்பில்லை என்றால் அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. சிலர் சிரிக்க தயங்குவதற்குக் காரணம் அவர்கள் பற்களின் நிறம். இது ஒரு சிறிய பிரச்னை தான். பற்கள் கறை படிந்தும், மஞ்சளாகவும் இருப்பதற்குப் பாரம்பரிய காரணங்களுடன், அடிக்கடி தேநீர், காபி அருந்துவது, புகைப்பிடிப்பது போன்றவற்றாலும் வரும். இதற்காக சிலர் அடிக்கடி பல் மருந்துவரிடம் பிளீச் செய்து சுத்தமாக்கி கொள்வார்கள். அது கேடு விளைவிக்க கூடியது. மஞ்சள் கறையினை நீக்க பல இயற்கை வழிகள் உள்ளன.
- எலுமிச்சை சாருடன் உப்புக் கலந்து பற்களை சில நிமிடங்கள் தேய்த்து வந்தால் நல்லது. பின் குளிர் நீரில் நன்கு கொப்பளித்தால் கறை போய்விடும்
- தினம் ஓர் ஆப்பிள் சாப்பிட்டு வந்தாலும் கறைகள் நீங்கும்.
- உப்பை அதிகம் பயன்படுத்தாமல், சாதாரண சுத்த சாம்பலைக் கொண்டு வாரம் ஒருமுறை தேய்த்தாலும் கறைகள் நீங்கும்
- ஆரஞ்சுப்பழத் தோலைக் கொண்டு இரவில் பல் தேய்த்தால் கறைகள் நீங்கும்.
- சாதாரண டூத் பேஸ்ட் 1 ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். ரெண்டு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு சில சொட்டுகள் என இவற்றை கலந்து உங்கள் டூத் ப்ரஷ்ஷில் வைத்து 5 நிமிடம் மென்மையாக பல் துலக்குங்கள். தினமும் இப்படி தொடர்ந்து செய்து வர, மஞ்சள் கறை நீங்கி பற்கள் பளிச் அழகு பெறும்.

- மஞ்சள் பொடி, தேங்காய் எண்ணெய் கலந்து டூத் ப்ரஷ்ஷில் 5 நிமிடம் தேய்த்தபின் வழக்கமான பேஸ்ட்டால் மீண்டும் ஒரு முறை துலக்குங்கள். பலன் கண்கூடாகத் தெரியும்.
- 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சிறிதளவு நீர் விட்டு நன்றாக குழைக்கவும். இதனை வழக்கமான டூத் ப்ரஷ்ஷை பயன்படுத்தாமல் பேபி ப்ரஷ்ஷால் மென்மையாக பற்களை துலக்குங்கள். வாரம் ஒரு முறை செய்தால் கூட போதும்.
- கரிப்பொடியை சிறிதளவு எடுத்து அதனை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பேஸ்ட் போலச் செய்து, ப்ரஷ் செய்யுங்கள். நாக்கு, பற்கள் என கருப்பாகிவிடும், பரவாயில்லை தினமும் இதில் பல் துலக்கினால் மஞ்சள் கறை நீங்கிவிடும்.
- 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சிறிதளவு டூத் பேஸ்ட், அரை மூடி எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் இவற்றை எல்லாம் சேர்த்து நன்றாக கலக்கவும். அலுமினிய ஃபாயில் பேப்பரை பற்களின் அளவுக்கு கத்தரித்து அதில் இந்த பேஸ்டை ஊற்றி அப்படியே பற்களில் வைத்து மூடவும். பத்து நிமிடங்கள் கழித்து மிச்சமிருக்கும் பேஸ்டால் டூத் ப்ரஷ் பயன்படுத்தி பற்களை நன்றாக துலக்குங்கள். இது பற்காறைகளை அகற்றி பற்களின் படிந்துள்ள அனைத்துவித கறைகளையும் நீக்கிவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சா்வதேச கராத்தே போட்டி: காடையூா் விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

தேசியவாத காங்கிரஸ் தலைவா் கொலை வழக்கு: அமித் ஜோகிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்

ஆம்பூரில் அமைதியாக முடிந்த வாக்குப் பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


