பெரும்பாலான சிகிச்சைமுறைகளில் கீமோதெரபி ரசாயணங்கள் உடலுக்குள் இஞ்சக்சன் மூலமாக செலுத்தப்படுகிறது. அல்லது கதிர்வீச்சு முறையில் உடலில் உள்ள கேன்சர் செல்கள் ஊடுருவி அழிக்கப்படுகின்றன. அல்லது கேன்சர் செல்கள் பரவிய உடலுறுப்புகள், உள்ளுறுப்புகள் வெட்டி எடுக்கப்படுகின்றன. சில நோயாளிகளுக்கு சிலசமயங்களில் இந்த மூன்று விதமான சிகிச்சைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. அப்போதெல்லாம் மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் பொய் சொல்கிறார்கள், ‘நீங்கள் நோயை எதிர்த்துப் போராடிக்கொண்டு இருக்கிறீர்கள் என!’ ஆனால், உண்மை என்னவென்றால் நீங்கள் உங்களது நேரத்தை, வாழ்நாளை கடன்வாங்கி நீட்டித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தான். சிகிச்சையின் தாக்கம் முடிந்த பின் மீண்டும் அதே பழைய கடுமையான நோய்த்தாக்குதல் தொடங்குகிறது. முடிவில் மரணமே எஞ்சுகிறது. இதில் சோகத்துக்குரிய விஷயம் நீங்கள் நோயால் இறப்பதைக் காட்டிலும் நோய்க்கான சிகிச்சையால் மிகுந்த வலியுடனும், மோசமான முறையிலும் இறக்க நேரிடுகிறது என்பது தான்.