டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தொடர்ச்சியாக ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக் கொள்வோர் கவனத்துக்கு...

2015 ஆம் ஆண்டில் எடுக்கப் பட்ட ஒரு மருத்துவ சர்வே முடிவின் படி 52% பேர், நோய்களைத் தடுக்க ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். 84% பேர் ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க ஆஸ்பிரின்

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:49 pm

RKV

தினமும் ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக் கொள்வதால் என்ன ஆகும்?

2015 ஆம் ஆண்டில் எடுக்கப் பட்ட ஒரு மருத்துவ சர்வே முடிவின் படி 52% பேர், நோய்களைத் தடுக்க ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். 84% பேர் ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆஸ்பிரினை எதற்காக எடுத்துக் கொள்வதானாலும் அதற்கும் ஒரு வரமுறை உண்டு. அதைவிடுத்து தொடர்ச்சியாக ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டீர்களானால் மற்ற அனைத்து மருந்துப் பொருட்களையும் போல ஆஸ்பிரினும் உடல் ஆரோக்க்யத்தில் குறிப்பிடத்தக்க அளவில் கெடுபலன்களை உண்டாக்கக் கூடியதே என்று அந்த சர்வே முடிவு தெரிவிக்கிறது.

தினமும் ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தால் என்னென்ன விதமான விளைவுகள் ஏற்படும் என்பதையும் அதே சர்வே முடிவு பட்டியலிட்டுள்ளது. அதன்படி;

  • ஒவ்வாமை
  • வயிற்றுக்குள் ரத்தக்கசிவு
  • குடற்பகுதியில் திடீரென ரத்தக் கசிவு
  • வலிப்பு நோய்
  • மூளையில் ரத்தக்கசிவு 

உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படக் கூடும். 

அதனால் மருத்துவரின் தகுந்த ஆலோசனைக்குப் பிறகு மட்டுமே மேற்கண்ட மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, மருத்துவர் ஆலோசனை இன்றி வழக்கமாக காய்ச்சல், தலைவலி, உடல்வலிக்கு நாம் எடுத்துக் கொள்ளும் பாராசிட்டமால், ஜெலூசில், சாரிடான், குரோசின் மாத்திரைகளைப் போல ஆஸ்பிரினையும் மருத்துவர் ஆலோசனைகள் இன்றி அடிக்கடி எடுத்துக்கொள்வது உயிராபத்தில் கொண்டு நிறுத்தலாம். ஆஸ்பிரின் மாத்திரமல்ல மேற்கண்ட பிற மாத்திரைகளையும் கூட அடிக்கடி எடுத்துக் கொள்வது ஆபத்தானதே! மருந்து, மாத்திரைகளைப் பொறுத்தவரை மருத்துவர் ஆலோசனையோ, பரிந்துரையோ இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் முயற்சி செய்வது தவறு. அதை விட, வீட்டு வைத்தியமாகவோ அல்லது பாட்டி வைத்தியமாகவோ பாரம்பரியமாகப் பின்பற்றி நற்பலன் தந்து கொண்டிருக்கும் முறைகள் எதையாவது முயற்சி செய்யலாம். அதாவது இம்மாதிரியான மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் இருக்கையில் மருத்துவ ஆலோசனை பெற வகையில்லாத போதிலாவது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.