திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

முகத்தில் படர்ந்த கருமையை போக்க உதவும் கசாயம்

முகத்தில் படர்ந்த கருமை நிறமும். உடலின் நிறமும் மாற வேண்டுமா? இந்த கசாயத்தைத் தினமும் குடித்துவாருங்கள். 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:07 am

கோவை பாலா

முகத்தில் படர்ந்த கருமை நிறமும். உடலின் நிறமும் மாற வேண்டுமா? இந்த கசாயத்தைத் தினமும் குடித்துவாருங்கள். 

ஆவாரம் பூ  நன்னாரி வேர் கசாயம்

தேவையான பொருட்கள்

நன்னாரி வேர்.      -   5  கிராம்

ஆவாரம் பூ.             -   10 கிராம்

ஆலம் பட்டை.         -    5  கிராம்
                                   
செய்முறை

முதலில் நன்னாரி வேர், ஆவாரம் பூ, ஆலம் பட்டை இவை மூன்றையும் எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிக்க வைத்து 100 மி.லி அளவாக சுண்ட வைத்து கசாயமாக்கி   வடிகட்டிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்தக் கசாயம் முகத்தில் படர்ந்த கருமை நிறத்தை  மாற்றக் கூடிய அருந்தாகும். இந்தக் கசாயத்தை தயார் செய்து தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளையும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் முகத்தில் படர்ந்த கருமை நிறமும் மாறும். உடலின் நிறமும் மாறும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

-கோவை பாலா

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell  :  96557 58609  ,  75503 24609
Covaibala15@gmail.com  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.