எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவும் அருமருந்து

உடலில் அதிகப்படியான கொழுப்பு நேர்ந்துவிட்டதே என்று கவலைப்படுபவரா நீங்கள்? இதோ கொழுப்பைக் கரைக்க உதவும் அருமருந்து. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:39 pm

கோவை பாலா

உடலில் அதிகப்படியான கொழுப்பு நேர்ந்துவிட்டதே என்று கவலைப்படுபவரா நீங்கள்? இதோ கொழுப்பைக் கரைக்க உதவும் அருமருந்து. 

தண்டுக் கீரை  மிளகு கசாயம்

தேவையான பொருட்கள்

தண்டுக் கீரை.         -    ஒரு கைப்பிடி

மிளகு.                          -   10

மஞ்சள் தூள்.            -  சிறிதளவு

செய்முறை

முதலில் தண்டுக் கீரையை சுத்தப் படுத்தி ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும். மிளகைத் தட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஐந்து டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் தண்டுக் கீரை, மிளகு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். கீரையுடன் நன்கு கொதிக்க வைத்து அதனை பாதியளவாகச் சுண்டவைத்து இறக்கி வடிகட்டிக்  குடிக்கவும்.

பயன்கள்

உடலில்  உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவும் அருமருந்தாக செயல்படும் தண்டுக் கீரை மிளகு கசாயம்.  இதனை தினமும் காலை மாலை என இருவேளையும் வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம். 

இரவு படுக்கப்போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609   ,  73737 10080

Covaibala15@gmail.com  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.