மூட்டு வலியினால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் தரும் கசாயம்
மூட்டு வலியினால் அவதிப்படுபவர்கள் கறிவேப்பிலை சுக்கு கசாயத்தை பயன்படுத்தி நிவாரணம் பெறுங்கள்.


மூட்டு வலியினால் அவதிப்படுபவர்கள் கறிவேப்பிலை சுக்கு கசாயத்தை பயன்படுத்தி நிவாரணம் பெறுங்கள்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை. - ஒரு கைப்பிடி
சுக்கு. - 5 கிராம்
வெந்தயம். - 5 கிராம்
மஞ்சள் தூள். - சிறிதளவு
செய்முறை
முதலில் கறிவேப்பிலையை ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் கறிவேப்பிலை , சுக்கு , வெந்தயம் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து அதனை பாதியளவாகச் சுண்ட வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
பயன்கள்
மூட்டு வலியினால் அவதிப்படுபவர்கள் இந்தக் கசாயத்தை தயார் செய்து காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூட்டு வலியிலிருந்து விடுபடலாம். மேலும் இந்தக் கசாயத்தை வாத சார்ந்த நோய்களுக்கு நிவாரணமாக அமையும்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
- கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609 , 73737 10080
Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...