எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பெரு வயிறு கரையவும் , மலச்சிக்கலை தீர்க்கவும் உதவும் கசாயம்

இந்த கசாயத்தை பெரு வயிறு பிரச்சனையால் அவதிப் படுபவர்கள் தினமும் இரவு  உணவிற்குப் பின்  குடித்து வந்தால் பெரு வயிறு கரையும். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:35 pm

கோவை பாலா

கறிவேப்பிலை நிலாவரைக்  கசாயம் செய்ய தேவையான பொருட்கள்

உலர்ந்த கறிவேப்பிலை      -  200 கிராம்

உலர்ந்த நிலாவரை             -  200  கிராம்

செய்முறை

முதலில் கறிவேப்பிலை மற்றும் நிலாவரையை நன்கு உலர வைத்து தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். பின்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 300 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் அரைத்து வைத்துள்ள பொடியில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். நீர் நன்கு கொதித்து பாதியளவாக சுண்டவைத்து இறக்கி வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த கசாயத்தை பெரு வயிறு பிரச்சனையால் அவதிப் படுபவர்கள் தினமும் இரவு  உணவிற்குப் பின்  குடித்து வந்தால் பெரு வயிறு கரையும். 

மேலும் இதே கசாயத்தை தீராத மலச்சிக்கலினால் அவதிப்படுபவர்களும் இரவு வேளை உணவிற்குப் பின் குடித்து வருவதன் மூலம் தீராத மலச்சிக்கலும் தீரும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609   ,  73737 10080
Covaibala15@gmail.com  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.