லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சுவையோ சுவை!

வெந்தயக் கீரை சமைக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள கசப்புத்தன்மை நீங்கிவிடும்.

News image
Updated On :8 பிப்ரவரி 2015, 6:03 am

* வெந்தயக் கீரை சமைக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள கசப்புத்தன்மை நீங்கிவிடும்.

* வற்றல் குழம்பு வைக்கும்போது குழம்பு கொதித்து இறக்கியவுடனே சிறிது மிளகுப் பொடியையும், சிறிது மஞ்சள் பொடியையும் போட்டுக் கலக்கினால் அதிக சுவையுடன் மணமாக இருக்கும்.

* கூட்டு, குருமா குழம்பு போன்றவற்றில் உப்பு அதிகமாகிவிட்டால் ஓர் உருளைக்கிழங்கை வெட்டிப்போட்டு கொதிக்கவிட்டால் அதிகப்படியான உப்பை உருளைக்கிழங்கு உறிஞ்சிவிடும்.

* மிளகாய் பொடி வறுக்கும்போது ஒரு கைப்பிடி வேர்க்கடலையைச் சேர்த்து வறுத்துப் பொடிசெய்து கொண்டால் பொரியலுக்கு மேலே தூவினால் சுவையாக இருக்கும்.

* கறிவேப்பிலை துவையலுக்கு உளுத்தம்பருப்புக்கு பதில் வேர்க்கடலையை வறுத்துப் போட்டால் துவையல் சுவையாக இருக்கும்.

* வேக வைத்த உருளைக்கிழங்குடன் அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து ஓமப்பொடி பிழிந்தால் சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.