எனக்கு வயது 48. வீட்டு விலக்கு (மாதவிடாய்) வரும்போது 2 வது நாள் அதிகமாக ரத்தப்போக்கு இருக்கிறது. ஒருமாத இடைவெளி என்று இல்லாமல் சீக்கிரமே வந்துவிடுகிறது. மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரம் முன்பாகவே கால்வலி, உடல் வலி, தலைவலி என்று ஏதாவது ஒரு வலி வந்துவிடுகிறது. வாய்ப்புண் அடிக்கடி வருகிறது. இது எதனால்? இதற்கு ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?
ஏ.கோமதி, கிருஷ்ணாபுரம்.
உடல் உஷ்ணத்தினால் அதிக உதிரப் போக்கு ஏற்படலாம். வாய்ப்புண் வருவதற்கும் அதுவே காரணமாகலாம். உதிரப் போக்கு உள்ள நாட்களில் தலைக்குத் தண்ணீர் விட்டு குளிப்பதால் கால்வலி, உடல் வலி, தலைவலி போன்ற உபாதைகள் தோன்றக் கூடும். கசகசாவை மாதவிடாய் காலத்துக்கு முன் ஒருவாரம் பாலில் அரைத்துக் கலக்கிச் சாப்பிட்டு வர, நீங்கள் குறிப்பிடும் வலி அனைத்தும் நீங்கிவிடும். வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து 4 பங்கு சர்க்கரை சேர்த்து லட்டு தயாரித்துச் சாப்பிட்டால், மாதவிடாய் உரிய காலத்தில் ஏற்படும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி, இடுப்பு வலி குறையும்.
தானிய உணவுப் பொருட்களில் மிகச் சிறந்தவகையான கோதுமையை, பெருங்குருணையாக்கி அன்னம் சமைத்துச் சாப்பிடுவது, சுக்கா ரொட்டி, சப்பாத்தி, பூரி என்ற வகையிலும், சத்துமாவு, கஞ்சியாகவும் சாப்பிட்டால் மாதவிடாய் உதிரப் பெருக்கைக் கட்டுப்படுத்தலாம். வாயுப்பிடிப்பு, வாயுவலி உள்ளவருக்கு ஏற்ற உணவுப் பண்டம். உளுந்து சேர்ந்த அரிசியை வேக வைத்து உண்பது, எள்ளும் உளுந்தும் உணவில் அதிகம் சேர்ப்பதும் நல்லதே.
புஷ்யாணுகம் எனும் ஆயுர்வேத சூரண மருந்து உங்களுக்குப் பயன்படலாம். ஒரு ஸ்பூன் (5 கிராம்) சூரணத்தை 1 1/2 ஸ்பூன் தேன் விட்டுக் குழைத்து 1/2 ஸ்பூன் அரிசி கழுவிய தண்ணீருடன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, அதிக ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும். சதாவரீகுலம் எனும் லேகிய மருந்தை மதிய உணவுக்கு முன் சாப்பிட, கருப்பையைச் சார்ந்த உதிரப் போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவையை மட்டுப்படுத்தும். தான்வந்திரம் எனும் தைலத்தை வாரம் இருமுறை அதாவது, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் உடலெங்கும் தேய்த்து குளித்துவர, உடல் வலியைப் போக்கிக் கொள்ளலாம். குமார்யாஸவம் எனும் மருந்தை சுமார் 6 ஸ்பூன் (30 மி.லி) காலை இரவு சாப்பிட்டு வர, பசி நன்றாக எடுக்கும். உதிரப் போக்கைச் சரியான அளவில், நேரத்தில் வரும்படி உடலை அமைத்துக் கொடுக்கும்.
உணவில் அதிக காரம், உப்பு, புளி தவிர்க்கவும். அலுவலகத்தில் உடல் களைப்பைத் தரும்படியான செயல்களைக் குறைக்கவும். மனக்கொதிப்பை ஏற்படுத்தும்படியான சூழ்நிலை இருந்தால், அவ்விடத்தைவிட்டு உடனடியாக விலகிவிடவும். மனதில் அமைதியான தன்மையை வளர்த்துக் கொள்ளவும். இரவில் அதிகம் கண் விழித்திருக்காமல் படுத்து உறங்கவும். உடல் - மன அமைதி இந்த வயதில் உங்களுக்கு அதிகம் தேவை. மாதவிடாய் நின்று விடுவதற்கான அறிகுறிகள் அதிகம் தென்படுவதால் உடல் உழைப்பையும், மனதுக்கான சூழ்நிலையும் சரியான விகிதத்தில் கட்டுப்படியான நிலையை நீங்கள் வளர்த்துக் கொள்வது அவசியம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


