பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

புராஸ்டேட் வீக்க பிரச்னை: ஹோமியோபதி உதவும்

பெண்களுக்கு கர்ப்பப் பை போன்று, தாம்பத்ய உறவின்போது ஆண்களுக்கு உதவுவது புராஸ்டேட் சுரப்பியாகும். ஆண்களுக்கு இந்தச் சுரப்பியில் பொதுவாக 50 வயதுக்கு மேல் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு. அதாவது, ஆண்களுக்கு

News image
Updated On :2 ஜனவரி 2024, 2:09 pm

டாக்டர் ஆர். ஆனந்த்

பெண்களுக்கு கர்ப்பப் பை போன்று, தாம்பத்ய உறவின்போது ஆண்களுக்கு உதவுவது புராஸ்டேட் சுரப்பியாகும். ஆண்களுக்கு இந்தச் சுரப்பியில் பொதுவாக 50 வயதுக்கு மேல் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு. அதாவது, ஆண்களுக்கு முதுமையில் புராஸ்டேட் சுரப்பி வீக்கம் அடைந்து சிறுநீர்த் தாரையை அழுத்துவதால், சிறுநீர் கழிப்பதில் பிரச்னைகள் ஏற்பட ஆரம்பிக்கும்.

ஒரு ஆண் பருவமடையும் சமயத்தில் இந்தச் சுரப்பி வளர்ச்சியடையத் தொடங்கி பின்னர் 25 வயதுக்குப் பின் விரிவடைந்து கொண்டே இருக்கும். இந்தச் சுரப்பி இயல்பான அளவுக்கு அதிகமாக வீக்கம் அடைந்து, சிறுநீர்ப் பாதையை வெளிப் பக்கமாக இருபுறமும் அழுத்துகிறது.

இதனால் சிறுநீர் வெளியேறும் குழாயின் குறுக்களவு சுருங்கி, சிறுநீர் வெளியேறுவது தடைபடுகிறது. சிறுநீர் வெளியேறுவது தடைபட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும். சிறுநீர் முழுமையாக வெளியேறாது.

இதனால் சிறுநீர்ப் பையில் சிறுநீர் தேங்கும் நிலை ஏற்படும். இந்தப் பிரச்னை இரவு நேரத்தில் மிகுந்த தொல்லை கொடுக்கும். அதாவது, சிறுநீரை முழுமையாக வெளியேற்ற முடியாமல், இரவில் சிறுநீர் கழிக்க அடிக்கடி எழுந்து செல்ல வேண்டியிருக்கும். இதனால் தூக்கம் கெடும். ஒரு சிலருக்கு அவசரமாக வலியுடனும், எரிச்சலுடனும் சிறுநீர் வெளியேறும். சிறுநீர்ப் பாதையில் எரிச்சல், வலி, சிறுநீர்ப்பை மற்றும் அடிவயிற்றில் வலி, நோய்த் தொற்று ஆகியவையும் ஏற்பட வாய்ப்பு உண்டு. சிறுநீர்ப் பையில் கற்கள் உண்டாகவும் வாய்ப்பு உண்டு. சிறுநீர்ப் பை தடித்து எரிச்சல் ஏற்படலாம். ஒரு சிலருக்கு காய்ச்சலும் வரலாம்.

தீர்வு என்ன? புராஸ்டேட் சுரப்பியைச் சுருங்கச் செய்து பிரச்னைக்குத் தீர்வு காண ஹோமியோபதி மருந்துகள் உதவும். புராஸ்டேட் வீக்கப் பிரச்னையை துல்லியமாக மதிப்பீடு செய்து, ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை செய்து கொள்ளும் நிலையில் நிவாரணம் கிடைக்கும்.

ஹோமியோபதி மருத்துவ நிபுணர்: www.vijayhomoeoclinic.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.