மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

26.3.1976: தமிழ்நாட்டில் விருந்துக் கட்டுப்பாடு - திருமணம் அல்லது கருமாதியில் 200 பேருக்கே உணவளிக்கலாம்

தமிழ்நாட்டில் விருந்துக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது பற்றி...

News image

26.3.1976 - DPS

Updated On :25 மார்ச் 2026, 10:25 pm

சென்னை, மார்ச். 25 - திருமணங்கள் அல்லது கருமாதிகளில் இருநூறு பேர்களுக்கு மேல் விருந்து போடக்கூடாது என்று தர்ணயம் செய்யும் விருந்தினர்கள் கட்டுப்பாடு உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடு உடனடியாக இன்று முதலே அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடம்பர விருந்துகளின் பெயரால் உணவுப் பொருள்கள் விரயமாவதைத் தடுக்கும் நோக்கத்துடன் விருந்தினர் கட்டுப்பாடு உத்திரவு அமல் செய்யப்படுவதாக அரசின் அறிவிப்பு கூறுகிறது.

இதன்படி அதிகபட்சம் எவ்வளவு பேருக்கு விருந்து போடலாம் என்ற எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்யாண விருந்து அல்லது கருமாதி சாப்பாடாக இருந்தால் இரு நூறுபேர்களுக்கு மேல் விருந்து சாப்பாடு போடக்கூடாது.

ஏனைய குடும்ப விழா அல்லது சொந்த விழா போன்றவையாக இருந்தால் அவற்றில் ஐம்பது பேர்களுக்கு மேல் விருந்து போடக்கூடாது. அரிசி அல்லது கோதுமையைப் பயன்படுத்தி விருந்தளிக்கும் இடங்களில் இந்த உத்திரவு கண்டிப்பாக கடைபிடிக்கப்பட் வேண்டும். கோதுமையினால் அல்லது கோதுமைப் பண்டங்களை உபயோகித்துச் செய்யப்பட்ட ரொட்டி, பிஸ்கட், மற்றும் பப்படம் போன்றவை எவ்வளவு பேர்களுக்கு வேண்டுமானாலும் விருந்தில் பரிமாறலாம்.

விதிவிலக்குகள்

தலைநகரில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் போன்றவை ஏற்பாடு செய்யும் அல்லது அவற்றிற்கு அளிக்கப்படும் விருந்துகள், அரசு ஏற்பாடு செய்யும் விருந்துகள், வழிபாடு, பூஜை போன்ற மத சம்பிரதாயச் சடங்குகளை அடுத்து வழங்கப்படும் பிரசாதங்கள் ஆகியவை விஷயத்தில் இந்தக் கட்டுப்பாடு உத்திரவு பொருந்தாது. அவற்றிற்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பூராவுக்கும் உடனடியாக இந்த உத்திரவு அமலுக்கு வரும். இதே போல டீக்கடைகள், சாப்பாடு ஹோட்டல்கள், சிற்றுண்டிச் சாலைகள், அனாதைகளுக்கு உணவு வழங்கும் விடுதிகளுக்கும் இந்தக் கட்டுப்பாட்டு உத்தரவிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. ...

கன்னியாகுமரி வள்ளுவர் சிலை திட்டம் ஒத்திவைப்பு

சென்னை, மார்ச், 25 - கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு அருகில் வள்ளுவர் சிலையை அமைக்கும் திட்டம் இப்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விவேகானந்தர் சிலைக்கு எதிரே மிக உயரமான திருவள்ளுவர் சிலை வைக்கப்படும் என்று முந்தைய அரசு அறிவித்திருந்தது.

"குமரி முனையில் வள்ளுவர் சிலை வைப்பது சம்பந்தமாக மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. வேறு ஏதும் இப்போது சொல்வதற்கில்லை; அப்படியே உள்ளது" என்று தலைமைச் செயலர் கார்த்திகேயன் கூறினார்.

Summary

Restrictions on Feasts in Tamil Nadu: Food may be served to a maximum of 200 people at weddings or funeral rites.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.