டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

20.2.1976: அவசரநிலை அமல் பற்றி பிரதமர் பேட்டி - “நிலைமை சீர்திருந்தியதால் படிப்படியாக தளர்த்தப்படுகிறது”

அவசரநிலை அமல் பற்றி பிரதமர் பேட்டி அளித்தது பற்றி...

News image
20.2.1976
Updated On :19 பிப்ரவரி 2026, 10:30 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புதுடில்லி, பிப். 19 - நாட்டில் நிலைமை அபிவிருத்தி யடைந்திருப்பதைக் கருதி, அவசர நிலை அமல் படிப்படியாகத் தளர்த்தப்படுகிறதென்று பிரதம மந்திரி இந்திரா காந்தி இன்று கூறினார்.

பிரதமரைக் காண அவரது இல் த்துக்கு வந்திருந்த பிரெஞ்சு பிரசுரகர்த்தர்கள், புத்தக வியாபாரிகள் கோஷ்டியிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் ஒருமைப்பாட்டையும் ஸ்திரத்தன்மையையும், கட்டுப்பாட்டையும் பராமரிப்பதில்தான் தனது அக்கறையெல்லாம் என்று பிரதமர் கூறினார்.

இது சம்பந்தமாக சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால், அவசர நிலை அமலைப் படிப்படியாகத் தளர்த்தி வருகிறோம். சில எதிர்க்கட்சித் தலைவர்களை ஏற்கனவே விடுதலை செய்திருக்கிறோம். அவர்களை நீண்ட காலத்துக்கு சிறையிலேயே வைத்திருக்க வேண்டுமென்ற நோக்கம் எங்களுக்கில்லை என்று கூறினார்.

பிரதம மந்திரியின் பிரெஞ்சு உரையின் ஆங்கில மொழி பெயர்ப்பை டொமினிக் லேபியர் உதவினார். "நடுநிசியில் வந்த சுதந்திரம் " என்ற நூலின் கூட்டாசியர் இவர். அவசரநிலை பிரகடனத்தின் கீழ் உள்ள அதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படாமலிருக்கும் வகையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், எல்லா மட்டங்களிலும் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருக்கிறதென்றும் பிரதமர் சொன்னார்.

பண வீக்கத்தைக் குறைக்க பலதரப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவென்றும், 30 சதவிகிதமாக இருந்த பணவீக்கம் இப்போது 2 சதவிகிதமாகக் குறைந்துள்ளதென்றும் கூறினார். கிராக்கிப்படியை பைசல் செய்வதில் மத்திய அரசு ஊழியர்கள் தியாகம் செய்ததைப் பாராட்டினார். ...

ஜாம்ஷெட்பூர், பிப். 19 - ரஞ்சிக் கோப்பைக்கான கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் பம்பாய் 10 விக்கெட் வித்தியாசத்தில் பீஹாரைத் தோற்கடித்தது. நாளை முடிவடைய வேண்டிய ஆட்டம் இன்றைக்கே முடிந்து விட்டது. சென்ற ஆண்டிலும், பம்பாய்தான் சாம்பியன். ரஞ்சி கோப்பை 26-வது தடனயைாக அதனிடம் தங்கும்.

ஒரு நாள் ஓய்வுக்குப் பின், இரண்டாவது இன்னிங்ஸில் (4) 166 எடுத்திருந்த பீஹார் மேலும் ஆட்டத்தைத் தொடர்ந்தது. ஆனால் இடைவேளைக்குள், காப்டன் தல்ஜித் சிங்கையும், திலக் ராஜையும் இழந்தது. இருவரும் மிகவும் உஷாராகவே ஆடி வந்தனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு 135 நிமிஷங்களில் 107 ரன்கள் திரட்டியிருந்தனர். திலக் 56, தல்ஜித் 72. சிவால்கர், சாந்தீப், பாட்டீல் பந்து வீச்சை சமாளித்தனர். ஆனால் பம்பாய் காப்டன் அசோக் மன்காட் 75.2 ஓவர்களுக்குப் பின், இரண்டாவது புதிய பந்து கேட்டு வாங்கினார். நடுத்தர வேகப் பந்து வீச்சாளர் இஸ்மாயில் காப்டனின் நம்பிக்கையைப் பொய்யாக்கவில்லை. திலக் விக்கெட்டை நேரடியாக வீழ்த்திக் காட்டினார். 56 எடுத்த திலக், 4 பவுண்டரிகள் அடித்தார். ச்மித்ஸோம் காப்டனுடன் சேர்ந்து கொண்டார்.

பை பந்து வீச்சில் சாந்தீப் பாட்டில் காட்ச் பிடிக்கத் தவறினார். இதற்குப் பதிலாக அற்புதமான காட்ச் பிடித்து, பெரிய கையை அவுட்டாக்கினார். இஸ்மாயில் - பந்தில் காப்டன் தல்ஜித் சிங் காட்ச் கொடுத்தார். தல்ஜித் விடாப்பிடியாக 186 நிமிஷங்கள் ஆடி 87 ரன்கள் எடுத்தார். 11 பவுண்டரிகள் அடித்தார். இஸ்மாயில் மிகவும் கெட்டிக் காரத்தனமாக பந்து வீச்சைக் கையாண்டார். 6.1-1-10-2 என்ற புள்ளி விவரமே அருமையான சாதனை.

பீஹார் 240 ரன்களில் ஆட்டமிழந்தது. பம்பாய் வெற்றிபெறுவதற்கு 50 ரன்கள் தேவையாக இருந்தது. அதை சுதீர் நாயக், பார்க்கர் எடுத்தனர்.

பீஹாரை 10 விக்கெட் வித்யாசத்தில் பம்பாய் தோற்கடித்தது. பீஹாரை அவர்கள் தோற்கடிப்பது இது நான்காவது தடவை. பீஹார் இதுவரை கெலித்ததுமில்லை.

பம்பாய் ரஞ்சியில் வெற்றி பெறுவது இது 26-வது தடவை. 1948-ல் மட்டுமே ரஞ்சி கோப்பையை ஹோல்கர் பெற்றது. ஹோல்கர் ஜோஷ்டி சி.கே. நாயுடு, சி.எஸ். நாயுடு போன்றவர்களால் வளர்க்கப்பட்டதாகும்.

summary

20.2.1976: Prime Minister's interview on the imposition of Emergency - "It is being gradually eased as the situation improves"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.