தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கீழ் சென்னை, மதுரை, திருச்சி, கோவை சர்வதேச விமான நிலையங்களில் காலியாக உள்ள துணை மேலாளர், பணி அலுவலர், இளநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெ

News image
Updated On :7 டிசம்பர் 2023, 10:32 am


ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கீழ் சென்னை, மதுரை, திருச்சி, கோவை சர்வதேச விமான நிலையங்களில் காலியாக உள்ள துணை மேலாளர், பணி அலுவலர், இளநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பதவிகளுக்கு வரும் 26, 27, 29 மற்றும் ஆகிய நாள்களில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்ட உள்ளது. தகுதியான இருபாலரும் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் ஆங்கிலம், ஹிந்தியில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 28, 50, 55 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு பதவியின் அடிப்படையில் சம்பளமாக மாதம் ரூ.17,850 முதல் 45,000 வழங்கப்படும். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பதவி வாரியாக நேர்முகத் தேர்வு நடைபெறும் நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம் குறித்த விவரம்:

பதவி: Duty Manager - Passenger - 8
நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம்: சென்னைக்கு 26.12.2023 காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும். 

பதவி: Duty Officer - Passenger - 8
நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம்: சென்னைக்கு 27.12.2023 காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும். 

பதவி: Customer Service Executive, Jr.Customer Service Executive (Chennai 43, Madurai 15, Trichy 10, Coimbatore 12)

நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம்: சென்னைக்கு 27.12.2023 காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும். மதுரை, திருச்சி, கோவைக்கு 29.12.2023 காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும். 

பதவி: Utility Agent Cum Ramp Driver - 2

பதவி: Handyman (Madurai 20, Trichy 10, Coimbatore 20)

நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம்: 30.12.2023 அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும்.

தேர்வு நடைபெறும் இடம்: Office Of the HRD Department, AI Unity Complex, Pallavaram Contonment, Chennai-600 043, Land Mark: near Taj Catering.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.