இவற்றில் உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணியிடங்கள் ஒன்றிய அரசின் தலைமைச் செயலகம், மத்திய புலனாய்வுத் துறை, இரயில்வே துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை, தலைமை அலுவலகம் ஆகியவற்றிற்கும், ஆய்வாளர் பணியிடங்கள் (Inspector) ஒன்றிய அரசின் வருவாய் துறைகளான Central Board of Direct Taxes, Central Board of In Direct Taxes & Customs, Directorate of Enforcement, Central Bureau of Narcotics ஆகியவற்றிலும் மற்றும் உதவியாளர், கண்காணிப்பாளர் (Assistant Superintendent) பணியிடங்கள் ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.