ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: ஐடிஐ, பிஇ, பி.எஸ்சி முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

பெங்களூருவில் செயல்பட்டு வரும் சென்டரல் பவர் ரிசர்ச் இன்ஸ்டியூட் இல் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஐடிஐ, பிஇ, பி.எஸ்சி முடித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

News image

ஜேஇஇ தோ்வில் மோசடி நடந்தது எப்படி? விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Updated On :12 நவம்பர் 2022, 5:14 am



பெங்களூருவில் செயல்பட்டு வரும் சென்டரல் பவர் ரிசர்ச் இன்ஸ்டியூட் இல் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஐடிஐ, பிஇ, பி.எஸ்சி முடித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.CPRI/11/2022 

பணி: Engineering Officer - Grade-I
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.44,900
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரிக்கல், கம்யூனிகேசன், சிவில், மெக்கானிக்கல் போன்ற பிரிவில் பி.இ., பி.டெக் முடித்திருக்க வேண்டும். 2021, 2022 இல் நடைபெற்ற GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Scientific/Engineering Assistant
காலியிடங்கள்: 7
சம்பளம்: மாதம் ரூ.35,400
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வேதியியல் பிரிவில் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்று பி.எஸ்சி பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்து 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technician Grade-I
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.19,900
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: Assistant Grade-II
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.25,500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு பிரிவில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் அக்கவுண்டென்ட் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

பணி: MTS Grade-I(Watchman)
காலியிடங்கள்: 7
சம்பளம்: மாதம் ரூ.18,000
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று முப்படையில் ஏதாவதொன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து விவரம் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: Engineering Officer,Engineering Assistant பணிக்கு ரூ.1000. மற்ற பணிகளுக்கு ரூ.500 கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
 
விண்ணப்பிக்கும் முறை: www.cpri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.11.2022

Related Article

ரெப்கோ வங்கியில் வேலை வேண்டுமா? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கடந்த 5 ஆண்டுகளில் துணை ராணுவப் படைகளுக்கு 2 லட்சம் இளைஞர்கள் தேர்வு: மத்திய அரசு

மத்திய துணை ராணுவப் படைகளில் 24,369 காலியிடங்கள்: எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ராணுவத்தில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.