தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெறும்! கிரிஷ் சோடங்கர் மு.க. ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு! பனையூரில் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

நர்சிங் அதிகாரி வேலை: விண்ணப்பிக்க நாளை கடைசி!

மத்திய அரசில் காலியாக உள்ள 124 நர்சிங் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

News image

நர்சிங் அதிகாரி வேலை - எஸ்எஸ்சி

Updated On :3 மே 2026, 6:43 pm IST

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசில் காலியாக உள்ள 124 நர்சிங் அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து நாளை(மே 4)-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். Phase-XIV/2026/Selection Posts

பணி: Nursing Officer

பிரிவு: CGHS

காலியிடங்கள்: 107

வயது வரம்பு : 1.1.2026 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பிரிவு: AIIPH

காலியிடங்கள்: 8

வயது வரம்பு : 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

பிரிவு: CLTRI

காலியிடங்கள்: 9

வயது வரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு நர்சிங் பிரிவில் இளநிலைப் பட்டம் அல்லது சிஎன்எம் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். படிப்பை நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கணினி வழித் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் நர்சிங் பாடப்பிரிவு மற்றும் General English, General Awareness, General Intelligence, Quantitative Aptitude போன்ற பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும்.

தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவின, முன்னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.ssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.5.2026

Summary

The Staff Selection Commission has released a total of 124 vacancies for various paramedical Posts, including Nursing Officer in Various departments.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.