இந்திய விமானப்படையில் விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான திருமணமாகாத ஆண்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விவரங்களை பார்ப்போம்:
ஆள் சேர்ப்பு திட்டத்தின் பெயர்: Agniveer Vayu (Sports) Intake 02/2026
சம்பளம்: மாதம் ரூ.30,000 - ரூ.40,000 வழங்கப்படும்.
வயது வரம்பு: 2.7.2005-க்கும் 2.1.2009-தேதிக்கும் இடைப்பட்ட நாளில் பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் கணிதம், இயற்பியல் பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விளையாட்டுத் தகுதி: Athletics, Cycle Polo, Basket Ball, Boxing, Cycling, Cricket,Foot Ball, Gymnastics, Hockey, Kabaddi, Hand Ball, Squash, Volley Ball, Weight lifting,MTB (Cross Country),Wrestling, Water Polo, Lawn Tennis, Wyshu, Swimming, Diving ஆகிய ஏதாவதொன்றில் ஜூனியர், சீனியர் பிரிவில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அல்லது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அல்லது பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று விளையாடியிருக்க வேண்டும்.
மேலும், விளையாட்டு உள்பிரிவுகள், தகுதிகள் குறித்த விபரங்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
உடற்தகுதி: குறைந்தபட்சம் 152 செ.மீ. உயரமும், உயரத்திற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும். மேலும் Push Up, Pull Up, Squat திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 7 நிமிடத்தில் 1.6 கி.மீ. தூரத்தை ஓடி முடிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளையாட்டுத்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான நேர்முகத்தேர்வு மற்றும் விளையாட்டுத் திறனறியும் தேர்வு ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும். இது குறித்த தகவல் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். .
விண்ணப்பிக்கும் முறை: www.agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.3.2026.
முன் பதிவுக் கட்டணமாக ரூ.100 மட்டும் செலுத்தவும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
Summary
Regarding the employment notification for vacancies for sportspersons in the Indian Air Force...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை கடமைகள் எவை?

பிஎஸ்எல் தொடரில் இளஞ்சிவப்பு நிறமாக மாறிய வெள்ளைப் பந்து..! பாகிஸ்தானுக்கு அவமானம்!

ரிங்கு சிங் உள்பட 6 விளையாட்டு வீரர்களுக்கு அரசுத் துறையில் பதவி: உ.பி. அரசு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



