பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(பெல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புரஜெக்ட் பொறியாளர்( திட்ட) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும்.
இது குறித்த பற்றிய விபரம் வருமாறு:
அறிவிப்பு எண்.: 12949/HR/GAD/PE/2026/08
பணி: Project Engineer
காலியிடங்கள்: 7
சம்பளம்: மாதம் ரூ.40,000 -55,000
வயது வரம்பு: 1.3.2026 தேதியின்படி 32-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் Electronics, Electronics & Com-munication, Electronics & Tele-communication, Tele-communication, Communication,Electrical & Electronics, Applied Electronics, Instrumentation, Control Engineering போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவுகளில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி பொறியியல் முடித்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பெல் நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் முக்கிய பொறியியல் பாடப் பிரிவு மற்றும் பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். எழுத்து மற்றும் நேர்முகத் தேர்விற்கான அழைப்புக்கடிதம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். இது குறித்த விபரம் இணையதளத்திலும் வெளியிடப்படும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 400 மட்டும். கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்தவும் . எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு மற்றும் ஆன்லைன் விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். நேர் முகத்தேர்விற்கு வரும் போது விண்ணப்பப் படிவ நகல் மற்றும் அசல் சான்றிதழ்களை கொண்டு வரவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy Manager (HR), BEL, GHAZIABAD, Uttrapradesh - 201010.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 15.3.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Bharat Electronics Limited (BEL) a Navaratna Company and a premier Indian Public Limited Company in Professional Electronics with a portfolio of over 350 different products in the areas of Military Radars,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? - இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் வேலை!

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மெட்ராஸ் உரத்தொழிற்சாலையில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் டிரெய்னி பணி!

ரூ.66,000 சம்பளத்தில் ரைட்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

டான்சி நிறுவனத்தில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



