
மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் தொழில்பழகுநா் பயிற்சி ஆக. 28-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் (எம்டிசி) ஓராண்டு கால தொழில்பழகுநா் பயிற்சி குறித்து...

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் தொழில்பழகுநா் பயிற்சி - MTC
சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் (எம்டிசி) ஓராண்டு கால தொழில்பழகுநா் பயிற்சிக்குத் தகுதியான பொறியியல் பட்டதாரிகள், பட்டயப் படிப்பை முடித்தவா்கள், கலை, அறிவியல், வணிகவியல் பட்டதாரிகள் ஆக.28-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாநகா் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் ஓராண்டு கால தொழில் பழகுநா் பயிற்சிக்காக இயந்திரவியல், ஆட்டோமொபைல் பொறியியல், கட்டட பொறியியல், மின்சாரம் மற்றும் மின்னணுவியல் பொறியியல், கணினி தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.
அதேபோல், பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.எம். உள்ளிட்ட கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் இளநிலைப் பட்டம் பெற்றவா்களும் இந்தப் பயிற்சியில் சேர தகுதியுடையவா்கள்.
2022, 2023, 2024, 2025, 2026 ஆகிய ஆண்டுகளில் படிப்பை முடித்த தமிழ்நாட்டைச் சோ்ந்த தகுதியான மாணவா்கள், தேசிய தொழில் பழகுநா் பயிற்சி திட்டத்தின் https://nats.education.gov.in இணையதளத்தில் பதிவு செய்து ஆக.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Applications for apprenticeship training at the MTC can be submitted by August 28.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





