
விண்ணப்பிக்கலாம் வாங்க... விரைவு ரயில் கார்ப்பரேஷனில் துணை பொறியாளர் வேலை!
தேசிய விரைவு ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள துணை பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

தேசிய விரைவு ரயில் கார்ப்பரேஷன் - NHSRCL
தேசிய விரைவு ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள துணை பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, பிஇ, பி.டெக் முடித்தவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputy Engineer (Civil,Track)
காலியிடங்கள்: 18
தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ, பி.டெக், டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Deputy Engineer (Electrical)
காலியிடங்கள் : 4
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பிஇ, பி.டெக், டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Deputy Engineer (Signalling & Telecom)
காலியிடங்கள் : 5
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக், டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Deputy Chief Controller (Rolling Stock)
காலியிடங்கள்: 3
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன், மெகாட்ரானிக்ஸ்ஆகிய ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக், டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Deputy Chief Controller (Operations)
காலியிடங்கள்: 4
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக், டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்: மேற்கண்ட அனைத்துப் பணிகளுக்கும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினிவழித் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 400. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி , பெண்களுக்கு விண்ணப்பக் கட் டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: https://jobapply.in/NHSRCL 2026DyEngineer என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.7.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Apply for the post of Deputy Engineer, Deputy Chief Facility Controller...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







