
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி!
பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் டிரெய்னி இன்ஜினியர் பணியிடங்கள் குறித்து...

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் - கோப்புப்படம்
பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் டிரெய்னி இன்ஜினியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே(ஜூலை 1) கடைசி நாள் என்பதால் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 4788/002/REC/HR&A/CHN/2026
பணி: Trainee Engineer-I
காலியிடங்கள்: 9
சம்பளம்: மாதம் ரூ. 30,000 - 40,000
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் அல்லது அதற்கு இணையான பாடத்தில் பிஇ, பி.டெக் அல்லது பி.எஸ்சி(இன்ஜினியரிங்) முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.6.2026 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விவரம் கதகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. கட்டணத்தை எஸ்பிஐ மூலம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் வேண்டும். பின்னர் அதனை நகல் எடுத்து அதனுடன் தேவையான அசல் சான்றிதழ்களுடன் எழுத்துத் தேர்வில் கலந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 1.7.2026
வேலைக்கு விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Bharat Electronics Limited, a Navratna Company and India‟s premier Professional Electronics Company requires the following personnel on temporary basis for its Chennai Unit
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







