மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

வேலை... வேலை... வேலை... தமிழ்நாடு வனத்துறையில் டெக்னிக்கல் வேலை..!

தமிழ்நாடு வனத்துறையில் கீழ்வரும் டெக்னிக்கல் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

News image
Updated On :4 ஜூலை 2022, 9:37 am

தமிழ்நாடு வனத்துறையில் கீழ்வரும் டெக்னிக்கல் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: System Analyst/IT Manager  - 01
சம்பளம்: மாதம் ரூ.70,000
தகுதி: கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Computer Operator Grade  - 01
சம்பளம்: மாதம் ரூ.28,110
தகுதி: கணினி அறிவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 
பணி: Data Entry Operator - 01
சம்பளம்: மாதம் ரூ.25,320
தகுதி: கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஒரு மணி நேரத்தில் 15 ஆயிரம் எழுத்துக்கள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 
 
பணி: English to Tamil translator - 02
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று கணினி இயக்குவதில் அறிவுத்திறனும், ஆங்கிலம் மற்றும் தமிழில் நல்ல புலமையும் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Junior Consultant GIS Expert - 01
சம்பளம்: மாதம் ரூ.60,000
தகுதி: புவியியல், சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவில் முதுநிலைப் பட்டம், முனைவர் பட்டம் பெற்றிருப்பதுடன் தகவல் தொடர் மற்றும் எழுதுவதிலும் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Expert in Carbon Sequestration - 01
சம்பளம்: மாதம் ரூ.60,000
தகுதி: கம்ப்யூடேஷனல் சயின்ஸ், எர்த் சயின்ஸ், மெக்கானிக்கல், கெமிக்கல் இன்ஜினியரிங் போன்ற ஏதாவதொன்றில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Forestry Expert Agroforestry/Silviculture - 01
சம்பளம்: மாதம் ரூ.60,000
தகுதி: வேளாண் வனவியல், சில்விகல்ச்சர் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் எழுதுவதிலும், தகவல் தொடர்பியலிலும் நல்லதிறன் பெற்றவராக இருக்க வேண்டும். 

பணி: Economics Professional - 01
சம்பளம்: மாதம் ரூ.35,000
தகுதி: பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டம், முனைவர் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Marketing Expert - 01
சம்பளம்: மாதம் ரூ.35,000
தகுதி: பிபிஏ, சந்தை தொடர்பியல் போன்ற பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Accountant - 01
சம்பளம்: மாதம் ரூ.55,000
CA/ICWA முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் மற்றும் எம்எஸ் ஆபிஸில் நல்ல அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: http://www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Additional Principal Chief Conservator of Forests & Mission Director, 
Green Tamil nadu Mission, Panagal Buildings, Saidapet, Chennai - 600 015.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.07.2022

Related Article

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

வயா்மேன் உதவியாளா் பணி: ஜூலை 26க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மத்திய அரசில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

அரசு வேலை வேண்டுமா..? 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.