பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வேலைவாய்ப்பு அறிவிப்பு... டிப்ளமோ, பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

நாக்பூரில் செயல்பட்டு வரும் மத்திய சுரங்க மற்றும் எரிப்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் புராஜெக்ட் அசிஸ்டென்ட் மற்றும் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:48 am

ஆர். வெங்கடேசன்



நாக்பூரில் செயல்பட்டு வரும் மத்திய சுரங்க மற்றும் எரிப்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் புராஜெக்ட் அசிஸ்டென்ட் மற்றும் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். PA/010921/NU/R&A-II

மொத்த  காலியிடங்கள்:  39

பணி: Project Assistant 
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.20,000
தகுதி: இளங்கலை அறிவியல் பட்டம் அல்லது புவியியல் அல்லது வேதியியல் பாடப்பிரிவில் ஹானர்ஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கணினி அறிவியல், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொன்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Project Associate-I
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.25,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மைனிங், மெக்கானிக்கல், கணினி அறிவியல், ஐடி, எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது Applied Geology, Applied Chemistry- இல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Project Associate-II 
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.28,000
தகுதி: பொறியியல் துறையில் மைனிங், கணினி அறிவியல், ஐடி பிரிவில் பிஇ, பி.டெக் முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.cimfr.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதவ் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  
CSIR-CIMFR Research Centre, 17/C, Telenkhedi Area, Civil Line, Nagpur, Maharashtra - 440 001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.08.2021

மேலும் விவரங்கள் அறிய https://cimfr.nic.in/upload_files/current_opportunity/1626351980_Advt_010921_NU.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.