விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்..!

மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வரும்  ஸ்டாப் செயக்சன் கமிஷன் எனப்படும் எஸ்எஸ்சி, தற்போது பிளஸ் 2

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:21 am

ஆர். வெங்கடேசன்


மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வரும் ஸ்டாப் செயக்சன் கமிஷன் எனப்படும் எஸ்எஸ்சி, தற்போது பிளஸ் 2 தரத்திலான பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)
சம்பளம்: மாதம் ரூ.5200-20200, தர ஊதியம் ரூ.1900 

பணி: Postal Assistant (PA)/ Sorting Assistant (SA)
சம்பளம்: மாதம் ரூ.5200-20200, தர ஊதியம் ரூ. 2400

பணி: Data Entry Operator (DEO)
சம்பளம்: மாதம் ரூ.5200-20200, தர ஊதியம் ரூ.2400

பணி: Data Entry Operator, Grade ‘A’
சம்பளம்: மாதம் ரூ.5200-20200, தர ஊதியம் ரூ.2400

காலியிடங்கள்: இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கணினித் தேர்வு, தட்டச்சு தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண்கள், முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் பார்ட் 1, பார்ட் 2 என இருநிலைகளில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 2 பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

கணினி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: முதல்நிலை தேர்வு: 01.06.2019 முதல் 26.06.2019 வரை நடைபெற உள்ளது. இரண்டாம் நிலை தேர்வு 29.09.2019 நடைபெறுகிறது. 

மேலும் முழுமையா விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_chsl_05032019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.04.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.