HAL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் உதவியாளர் வேலைவாய்ப்புகள்..!
லக்னோவில் உள்ள "Hindustan Aeronautics Limited" நிறுவனத்தில் காலியாக உள்ள 77 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


லக்னோவில் உள்ள "Hindustan Aeronautics Limited" நிறுவனத்தில் காலியாக உள்ள 77 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Adv.No: HAL-ADL/HR/R/1211/2019/01
மொத்த காலியிடங்கள்: 77
பணி: Assistant (Admin/Accounts) - 10
தகுதி: எம்.காம் முதுகலை பட்டத்துடன் கணினி இயக்குவதில் 3 மாத சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant (Q.C/Inspection/Comercial) - 32
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant (Civil Works) - 1
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ11,050 - 28,970
பணி: Operator (Fitter, Electrician, Electronics, Mechanic, Instrument Mechanic) - 34
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 10,750 - 27,670
வயதுவரம்பு: 01.02.2019 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
குறிப்பு: அறிவிக்கப்பட்டுள்ள தகுதியை விட கூடுதல் தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.hal-india.ac.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://hal-india.co.in/Common/Uploads/Resumes/991_CareerPDF1_NOTIFICATION%20RECTT.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13..02.2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...