கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

பார்மசிஸ்ட் முடித்தவர்களா நீங்கள்... உங்களுக்கு தமிழ்நாடு மருத்துவத் துறையில் பார்மசிஸ்ட் வேலை

தமிழ்நாடு மருத்துவத் துறையின் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள மருந்தாளுநர் (பார்மசிஸ்ட்)

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:18 pm

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு மருத்துவத் துறையின் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள மருந்தாளுநர் (பார்மசிஸ்ட்) பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 229

பணியிடம்: தமிழ்நாடு

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Pharmacist (Siddha) - 148
பணி: Pharmacist (Ayurveda) - 38
பணி: Pharmacist (Unani) - 20
பணி: Pharmacist (Homoeopathy) - 23

தகுதி: சம்மந்தப்பட்ட ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 + 34,800 + தர ஊதியம் ரூ.4,200

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500. இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.03.2018

மேலும் தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2018/01_MRB_Pharmacist_Siddha_Notification_13022018.pdf, http://www.mrb.tn.gov.in/pdf/2018/04_MRB_Pharmacist_Unani_Notification_130202018.pdf, http://www.mrb.tn.gov.in/pdf/2018/03_MRB_Pharmacist_Homoeopathy_Notification_13022018.pdf, http://www.mrb.tn.gov.in/pdf/2018/02_MRB_Pharmacist_Ayurveda_Notification_13022018.pdf போன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.