குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு: தமிழக நீதிமன்றங்களில் நீதிபதி வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழகத்தின் கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி வேலூர் மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:42 pm

ஆர். வெங்கடேசன்

தமிழகத்தின் கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி வேலூர் மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள 320 நீதிபதிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து வரும் மே.7க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Civil Judge

காலியிடங்கள்: 320 

தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்று தமிழ்நாடு பார் கவுன்சில் அல்லது இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலத்தைச் சேர்ந்த பார் கவுன்சிலில் பதிவு செய்திருப்பதுடன்  வேண்டும். அறிவிப்பு வெளியான நாளில் எந்த நீதிமன்றத்திலாவது வழக்கறிஞராகவோ அல்லது பிளீடராகவோ பயிற்சி பெற வேண்டும். விரிவான தகுதியை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.27,700- 770-33,090 - 920 - 40450- 1080- 44770.

கட்டணம்: தேர்வுக் கட்டணமாக ரூ.500ம், பதிவுக் கட்டணமா ரூ.150ம் செலுத்த வேண்டும். கட்டணத்தை நெட் பேங்கிங், வங்கி அட்டைகள் மூலம் செலுத்தலாம். ஏற்கனவே, டிஎன்எஸ்சியில் இணையத்தில் நிரந்தர பதிவு செய்திருப்பவர்கள் பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.05.2018

முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி: 09.06.2018

மேலும் தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு திட்டங்கள், விரிவான தகுதிகள், சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய 
http://www.tnpsc.gov.in/notifications/2018_08_civil_judge_nofn.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.