தேசிய கட்டுமான கழகத்தில் அதிகாரி வேலை
என்பிசிசி என அழைக்கப்படும் தேசிய கட்டுமான கழக நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


என்பிசிசி என அழைக்கப்படும் தேசிய கட்டுமான கழக நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பொது மேலாளர்(நிதி), கூடுதல் பொது மேலாளர், துணை பொது மேலாளர், திட்ட மேலாளர், முதுநிலை திட்ட அதிகாரி, உதவி மேலாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட 94 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஐசிஏஐ., ஐசிடபுள்யுஏஐ, எம்பிஏ, சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ, பட்டம், முதுகலை ஹிந்தி-ஆங்கிலம் முடித்தவர்களுக்கு மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
அதிகபட்சம் 49 வயதுடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு, கல்வித்தகுதி வேறுபடுவதால் முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவும்.
தகுதியானவர்கள் குழு கலந்துரையாடல், தனிநபர் நேர் காணல், எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24.9.2017 ஆகும். மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், அனுபவம் போன்ற முழுமையான விவரங்களை அறிய www.nbccindia.com என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...