டிப்ளமோ முடித்தவர்களுக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணி
மும்பையில் செயல்பட்டு வரும் பாரத் பெட்ரோலிய கழக நிறுவனத்தில் காலியாக உள்ள 60 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


மும்பையில் செயல்பட்டு வரும் பாரத் பெட்ரோலிய கழக நிறுவனத்தில் காலியாக உள்ள 60 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி - காலியிடங்கள் விவரம்:
பதவி: Process Technician - Grade 7 - 40
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பதவி: Utility Operator Grade 7 - 15
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பதவி: Utility Operator - Grade 7 - 05
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ முடித்து முதல் வகுப்பு பாய்லர் அட்டெண்ட் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 5 - 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13,800 - 41,000.
வயதுவரம்பு: 18 - 30க்குள். இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில்டு தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.bharatpetroleum.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.10.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bharatpetroleum.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...