விளையாட்டு வீரர்களுக்கு திபெத்திய எல்லைக்காவல் படையில் பணி
விளையாட்டு வீரர்களுக்கு இந்திய திபெத்திய எல்லைக்காவல் படையில் கான்ஸ்டபிள் தரத்திலான 104 பணியிடங்களுக்கான சிறப்பு அறிவிப்பு


விளையாட்டு வீரர்களுக்கு இந்திய திபெத்திய எல்லைக்காவல் படையில் கான்ஸ்டபிள் தரத்திலான 104 பணியிடங்களுக்கான சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் ஜூடோ, டேக்வாண்டோ, மல்யுத்தம், பளுதூக்குதல், கால்பந்து, குத்துச்சண்டை, ஐஸ் ஆக்கி, வில்வித்தை, ஜிம்னாஸ்டிக், கபடி, தடகளம், துப்பாக்கி சுடுதல், கராத்தே, கைப்பந்து போன்ற விளையாட்டு பிரிவுகளில் குறிப்பிட்ட சாதனை படைத்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 31.10.2016 தேதியின்படி 18 - 23க்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்ச தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், தேசிய அளவிலான, பள்ளி- பல்கலைக்கழக போட்டிகளில் சாதித்தவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட
உடல்தகுதியும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100-ஐ செலுத்தி, விண்ணப்பங்களை தெளிவாக பூர்த்தி செய்து 31.10.2016க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...