பிரதமரை மேற்கு வங்கத்தில் உள்ள மா உணவகத்தில் (மா கேண்டீன்) உணவருந்த திரிணமூல் காங்கிரஸ் (சனிக்கிழமை ஏப்.25) அழைத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்ட நிலையில், முதல்கட்டம் ஏப்ரல் 23 அன்று நடைபெற்றது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 29 அன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் வரும் ஏப்ரல் 27 அன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற உள்ளது.
தேர்தல் பிரசாரத்துக்காக மேற்கு வங்கத்துக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஹூக்ளி ஆற்றில் படகு சவாரி செய்து, தெருவோரக் கடையில் 'ஜால்முரி' என்ற உணவை நேற்று (ஏப்.25) உண்டார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய திரிணமூல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் தெரிவித்ததாவது:
“பிரதமரை சிறிது நேரம் ஒதுக்கி, மா உணவகங்களில் ஏதேனும் ஒன்றில் உணவருந்த அழைக்கிறோம். மதியம் ரூ.5-க்கு சாதம், பருப்பு மற்றும் காய்கறிகள் கிடைக்கும். அங்கு சைவ உணவும் கிடைக்கும். மேலும், உங்களுடன் ஒருவர் வந்தால், இருவரும் சேர்ந்து ரூ.10-க்கு உணவருந்தலாம்.
மேற்கு வங்கத்தில் ஊடுருவல் குறித்து பிரதமர் பேசும் ஒவ்வொரு முறையும், எல்லைப் பாதுகாப்பு உள்ளிட்ட பொறுப்புகளைக் கொண்ட தனது உள்துறை அமைச்சர் அமித் ஷாவைத் தன்னை அறியாமலேயே மோடி விமர்சிக்கிறார்.
மேலும், தில்லியில் உள்ள யமுனை ஆற்றில் பிரதமரால் இதுபோன்ற புகைப்படங்களை எடுத்திருக்க முடியாது. ஏனென்றால், அங்கு தண்ணீர் மிகவும் மாசுபட்டிருக்கும்” எனத் தெரிவித்தார்.
Summary
The Trinamool Congress has invited the Prime Minister to dine at a 'Ma Canteen' in West Bengal (Saturday, April 25).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திரிணமூல் காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் இறுதி எச்சரிக்கை! என்ன நடந்தது?
மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி

திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. காங்கிரஸில் இணைந்தார்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை



