பஹராம்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரிக்கு ஆதரவாக முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன் வாக்கு சேகரித்தார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு ஏப்.23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் பஹராம்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஆதிர் ரஞ்சன் சௌத்ரி களமிறக்கப்பட்டுள்ளார்.
ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சௌத்ரி, மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு மாநிலத் தேர்தல் அரசியலுக்குத் திரும்பியுள்ளார். இந்த நிலையில் ஆதிர் ரஞ்சன் சௌத்ரிக்கு ஆதரவாக முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.
அதில், சௌத்ரியின் பரந்த அரசியல் அனுபவத்தையும் இப்பகுதியுடனான அவரது தொடர்பையும் அசாருதீன் நினைவு கூர்ந்தார். சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு, பால்கனிகளில் நின்றுகொண்டு முகமது அசாருதீனைப் பார்த்து கைகளை அசைத்தனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் பஹராம்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஆதிர் ரஞ்சன் சௌத்ரி முன்னாள் கிரிக்கெட் வீரரான திரிணமூல் காங்கிரஸின் யூசுப் பதானிடம் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Former Indian cricket team captain Mohammad Azharuddin campaigned in support of Congress candidate Adhir Ranjan Chowdhury in the Baharampur assembly constituency in Murshidabad in West Bengal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலம் மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பத்மநாபபுரம் தொகுதியில் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வாக்கு வங்கிக்காக மத அடிப்படையிலான இடஒதுக்கீடு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

சேலம் வடக்கு, மேற்கு தொகுதியில் பாமக வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


