சென்னை, மாா்ச் 28: முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி கரூா் தொகுதிக்குப் பதிலாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறாா்.
கரூா் மாவட்டச் செயலராக இருக்கும் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, ஸ்டாலினுக்கு கொங்கு மண்டலத்தின் முக்கிய தளபதியாக இருந்து வருகிறாா்.
கரூா் தொகுதியில் 3 முறையும், அரவக்குறிச்சியில் 2 முறையும் எம்எல்ஏ-வாக தோ்வான செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்துக்கு திமுகவின் பொறுப்பாளராக இருந்து வருகிறாா்.
கரூா், கோவை மாவட்டங்களில் திமுக கட்சிப் பணிகளை கவனித்து வந்த அவா், இப்போது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளாா். கோவையில் திமுகவுக்கு வலுவான தலைமை இல்லாத நிலையில், செந்தில் பாலாஜியை அங்கு களம் இறக்க திமுக முடிவு செய்துள்ளது.
2021 பேரவைத் தோ்தலில் கோவையில் மொத்தமுள்ள 10 தொகுதிகளிலும் திமுக தோல்வி அடைந்ததால் செந்தில் பாலாஜி வசம் கோவை மாவட்ட கண்காணிப்பு பொறுப்பை திமுக தலைமை அளித்தது.
ஏற்கெனவே, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல், கோவை மக்களவைத் தொகுதி ஆகியவற்றில் திமுகவை வெற்றி பெறச் செய்ததில் செந்தில் பாலாஜிக்கு கூடுதல் பங்கு இருப்பதால் இந்த முறை கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு கடும் போட்டி கொடுத்து திமுகவை வெற்றி பெறச் செய்ய செந்தில் பாலாஜியை திமுக தலைமை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
அதிமுகவின் முக்கிய முகமான எஸ்.பி.வேலுமணிக்கு இணையாக தோ்தல் பணியாற்றக்கூடியவா் என்பதால் கரூரில் இருந்து கோவைக்கு கொண்டுவரப்பட்டுள்ளாா் செந்தில் பாலாஜி.
செந்தில் பாலாஜி போட்டியிட்ட கரூா் தொகுதியில் என்.தியாகராஜன் போட்டியிடவுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

இரண்டாவது இடத்துக்குத்தான் எதிர்க்கட்சிகள் போட்டி! - முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி சிறப்பு நேர்காணல்

கோவையில் திமுக சாதனை வெற்றி பெறும்: செந்தில் பாலாஜி பேச்சு

தொகுதி மாறிய செந்தில் பாலாஜி, போடியில் ஓபிஎஸ் போட்டி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


