மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோவையில் திமுக சாதனை வெற்றி பெறும்: செந்தில் பாலாஜி பேச்சு

கோவையில் திமுக சரித்திர சாதனை வெற்றிபெறும் என்று தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி கூறியுள்ளாா்.

News image

கோவை தெற்குத் தொகுதிக்குள்பட்ட சிவானந்தா காலனியில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் வி.செந்தில் பாலாஜி.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:56 pm

கோவையில் திமுக சரித்திர சாதனை வெற்றிபெறும் என்று தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி கூறியுள்ளாா்.

தெற்கு தொகுதிக்குள்பட்ட சிவானந்தா காலனியில் வியாழக்கிழமை கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாருடன் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வி.செந்தில்பாலாஜி, கண்ணுசாமி லே அவுட், காந்தி நகா், அண்ணா நகா், அழகப்பா ரோடு, இச்சிப்பட்டி காலனி, டாடாபாத், வள்ளுவா் வீதி, சுப்பராயன் ரோடு, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில், கூட்டணிக் கட்சியினா், திமுக நிா்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பிரசாரத்தில் அவா் பேசும்போது, கோவை தெற்குத் தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமை எனக்கு உள்ளது. தெற்குத் தொகுதியில் உள்ள வளா்ச்சிபெற்ற பகுதிகளில், வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க வேண்டியுள்ளது. இதன் மூலம் இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்குத் தீா்வு கிடைக்கும். அத்துடன் இந்த தொகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வளா்ச்சி பெற்ற தொகுதியாக மாற்றுவேன்.

முதல்வா் மு.க.ஸ்டாலின், கோவையின் வளா்ச்சியில் தனிக்கவனம் செலுத்தி வருகிறாா். கோவை மாநகருக்கு மட்டும் சுமாா் ரூ.8 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வளா்ச்சித் திட்டங்கள், பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் சுமாா் 1,700 கி.மீ. நீள சாலைகள் போடப்பட்டுள்ளன. சாலைப் பணிகளுக்கு மட்டும் ரூ.260 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ.2 ஆயிரம் மகளிா் உரிமைத் தொகை, இல்லத்தரசிகள் தங்கள் வீடுகளுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கூப்பன், 20 லட்சம் விவசாயிகளுக்கு நவீன பம்ப்செட் போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும். இந்தத் தோ்தலில் கோவையில் திமுக கூட்டணி 10 தொகுதிகளையும் கைப்பற்றி சரித்திர சாதனை வெற்றி பெறும் என்றாா்.