பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை முதல்வர் மு.க. ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 14) விமர்சித்தார்.
பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றும் விதமாக நாடாளுமன்றத்தைக் கூட்ட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அரசியல் ஆட்சி அமைப்பில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதனிடையே, தேர்தல் நேரத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்டுவது எதற்காக? என முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது தொடர்பாக திண்டுக்கல்லில் செய்தியாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
''தேர்தல் நடக்கும் நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்தப்படுவது எதற்கு என்று ஸ்டாலின் கேட்கிறார். 5 மாநிலத்தில் மட்டுமே தேர்தல் நடத்தப்படுகிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் இல்லை. தேர்தல் தோல்வி பயத்தில் இத்தகைய கருத்தை முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.
பெண்களின் நீண்டகால கோரிக்கையான 33% இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறியுள்ளது. பெண்கள் மிகவும் எதிர்பார்த்த கோரிக்கை இது. பெண்களின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது. பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை முதல்வரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை'' என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Summary
Stalin cannot tolerate women receiving reservation Edappadi palanisamy
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு மசோதா: முதல்வரால் பொறுக்க முடியவில்லை

தமிழ்நாட்டுக்கு பழனிசாமி, புதுச்சேரிக்கு ரங்கசாமி : மு.க. ஸ்டாலின் விமர்சனம்
சங்கிகளைப்போல வாட்ஸ்ஆப் வதந்திகளை வாந்தியெடுக்கும் பழனிசாமி: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு

சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


