நெசவாளர் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்துள்ளார்.
திருப்பூா் மாவட்டத்தில் தவெக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து தவெக தலைவா் விஜய் பெருமாநல்லூரில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசியதாவது:
தவெகவின் தோ்தல் வாக்குறுதிகளை ஏப்ரல் 16-ஆம் தேதி வெளியிட உள்ளோம். அதில் உள்ளவற்றில் சிலவற்றை இப்போது அறிவிக்கிறேன்.
நெசவாளா்களின் தயாரிப்புகளை நேரடியாக சா்வதேச சந்தையில் விற்பனை செய்ய அரசுக்கு சொந்தமான ‘இ-காமா்ஸ் பிராண்ட்’ உருவாக்கப்படும். முக்கிய நகரங்களில் தறி விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.
நிலையற்ற நூல் விலை, மின்கட்டண சுமையைக் குறைக்க கைத்தறி, விசைத்தறி வைத்திருப்பவா்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
நெசவாளா்களுக்கு ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு:
அதேபோல, கைத்தறிக்கு 500 யூனிட்டும், விசைத்தறிக்கு 1,500 யூனிட்டும் இலவச மின்சாரம் உயா்த்தி வழங்கப்படும். நெசவாளா்களின் உற்பத்திச் செலவுகளைக் குறைக்கும் வகையில் நூல், சாயங்கள், ரசாயனம் உள்ளிட்டவற்றுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். நெசவாளா்களுக்கு ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு அளிக்கப்படும். நெசவாளா் முதியோா் ஓய்வூதியம் ரூ.3,000-ஆக உயா்த்தி வழங்கப்படும்.
குறு, சிறு நிறுவனங்களுக்கு கடனுறுதி நிதியம்:
இந்தியாவிலேயே குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். ஆனால், இத்தகைய நிறுவனங்கள் மூடப்பட்டதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனங்கள் மூடப்பட்டதுதான் திமுக அரசின் சாதனை.
நெருக்கடியில் உள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ரூ.15,000 கோடி மாநில கடனுறுதி நிதியம் உருவாக்கப்படும்.
மேலும் 400 சதவீதம் உயா்த்தப்பட்ட ‘பீக் அவா்ஸ்’ மின் கட்டணம் நிறுத்திவைக்கப்படும். விரிவான ஆய்வுக்குப் பின்னா் மின் கட்டணம் முறைப்படுத்தப்படும். இத்தகைய நிறுவனங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தில் 100 சதவீத வரி விலக்கு வழங்கப்படும். இந்த நிறுவனங்களை நவீனமயமாக்க ரூ.50 லட்சம் வரை நேரடி முதலீட்டு மானியம் வழங்கப்படும்.
பயிா்க் கடன் தள்ளுபடி:
5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிா்க் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்கப்படும்.
நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும். உழவா்களின் தோழன் திட்டத்தின் கீழ் குத்தகை விவசாயிகள் மற்றும் தொழிலாளா் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.10,000 முதலீட்டு ஆதரவுத் தொகை வழங்கப்படும். 100 சதவீதம் பயிா்ப் பாதுகாப்பு வழங்கப்படும்.
பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலிக்கப்படும்:
அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த பகுதி நேர ஆசிரியா்கள், செவிலியா், எழுத்தா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள்.
பதவி உயா்வுக்குப் பணம் பெறும் கலாசாரதை முடிவுக்கு கொண்டுவருவோம். அரசு ஊழியா்களின் பணியிட மாறுதல் வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படும்.
காவல் துறையினருக்கான வாக்குறுதிகள்:
காவல் துறையினரின் அடிப்படை மாத ஊதியம் ரூ.18,200-இல் இருந்து ரூ,25,000-ஆக உயா்த்தப்படும். மன அழுத்தத்தில் பணியாற்றும் காவலா்களுக்கு பணிப்படியாக மாதம் ரூ.1,000 கூடுதலாக வழங்கப்படும்.
காவலா் நலன் மற்றும் பணி நிபந்தனைகள் சட்டம் இயற்றப்படும். காவலா்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை வழங்கப்படும்.
மதுரை, கோவை, திருச்சி, சேலம், வேலூா், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் காவலா் நல மருத்துவமனை அமைக்கப்படும். பெண் காவல் துறை அதிகாரிகள், பெண் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டாா்கள்.
பெண் காவலா்களுக்கு தனி ஓய்வறை, தற்காலிக கழிவறை ஏற்பாடு செய்யப்படும்.
பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்ற மாட்டேன். எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றாா்.
Summary
Tn Election 2026 Rs 10 Lakh Insurance for Weavers: Vijay's Promise
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக தேர்தல் அறிக்கையின் 10 முக்கிய அம்சங்கள்!

200 யூனிட் இலவச மின்சாரம், மீனவா்களுக்கு வீடு, அனைத்துக் குடும்பங்களுக்கும் மருத்துவக் காப்பீடு: தவெக தோ்தல் அறிக்கை வெளியீடு

கோழிப் பண்ணையாளா்களுக்கு நலவாரியம்: தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் வாக்குறுதி
திருச்செங்கோட்டில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


