பிரசித்தி பெற்ற பரிகாரத் தலமான கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோயில், மருதமலை முருகன் கோயில் கரட்டுமேடு முருகன் கோயில், அனுவாவி சுப்பிரமணியர் கோயில், பாலமலை அரங்கநாதர் கோயில் வட மதுரை விருந்தீஸ்வரர் கோயில், இடிகரை வில்லீஸ்வரர் கோயில் ஆகியவை இந்தத் தொகுதியில் உள்ளன.
தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக்கொண்ட தொகுதிகளில் இரண்டாவது இடத்தில் கவுண்டம்பாளையம் உள்ளது. அதிக அளவிலான கிராமங்களையும், நகர், புறநகர் பகுதிகளையும், மலைவாழ் கிராமங்களையும் உள்ளடக்கியதாகத் திகழ்கிறது.
தொழில்
கிராமப்புறங்களில் வேளாண்மை முக்கிய தொழிலாக உள்ளது. ஏராளமான குறு சிறு தொழில் நிறுவனங்கள், எல்.எம்.டபிள்யு, பிரிக்கால், ரூட்ஸ், டைமண்ட் பேக்டரி போன்ற பல்வேறு பெருநிறுவனங்களும் இங்கு இயங்குகின்றன. சரவணம்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன.
சமூக நிலவரம்
நாயுடு சமுதாயத்தினர், அருந்ததியர்கள், கவுண்டர்கள், ஒக்கிலிய கவுடர்கள், பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள், வடமாநிலத் தொழிலாளர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
கோரிக்கைகள்
குடியிருப்புகளின் பெருக்கத்துக்கேற்ப பாதாள சாக்கடை, சாலைகள், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. சின்னத்தடாகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக செங்கல் உற்பத்தி முற்றிலும் நின்றுபோனது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ளது. பெரியநாயக்கன்பாளையத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும். கோவில்பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் வரையிலான கிழக்குப்புற வழிச்சாலை பணிகள் தொய்வடைந்துள்ளன. கவுண்டம்பாளையத்தில் மண்பாண்ட பொருள் தயாரிப்பு தொழில் அழியும் நிலையில் உள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு, உடற்கூறாய்வுப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும். துடியலூர், சின்னத்தடாகம், நாயக்கன்பாளையம் ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு தீராத பிரச்னையாக உள்ளது.
கௌசிகா நதி, சங்கனூர் ராஜவாய்க்கால் போன்றவற்றை தூர்வாரி சின்னவேடம்பட்டி, அக்ரஹார சாமக்குளம், சர்க்கார் சாமக்குளம் வெள்ளக்கிணறு ஆகிய பகுதிகளில் உள்ள நீராதாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆனைகட்டி, பாலமலை அடிவார கிராமங்களில் யானை, மான், காட்டுப் பன்றிகளின் தொந்தரவால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மனித விலங்கு மோதல்களால் பலர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2011, 2016 தேர்தல்களில் வி.சி.ஆறுக்குட்டி, 2021-இல் பி.ஆர்.ஜி. அருண்குமார் என தொடர்ந்து அதிமுக வென்று வருகிறது. கடந்த தேர்தலில் பி.ஆர். ஜி.அருண்குமார் 135,669 வாக்குகளும், திமுக வேட்பாளர் பையா (எ) கிருஷ்ணன் 125,893 வாக்குகளும் மநீம வேட்பாளர் சுரபி பங்கஜ் ஜெயின் 23,527 வாக்குகளும் பெற்றனர்.
இப்போது திமுக கூட்டணியில் மநீம உள்ளதால் இந்த வாக்குகள் யாருக்கு செல்லும் என்பது புதிராக உள்ளது. இந்தப் பின்னணியில் வலுவான அதிமுகவுக்கு காங்கிரஸ் சவால் அளிக்குமா என்பது மே 4-ஆம் தேதி தெரியவரும்.
வாக்காளர் விவரம்
ஆண்கள் - 1,98,430
பெண்கள் - 2,08,963
மூன்றாம் பாலினத்தவர் - 114
மொத்தம் - 4,07,507
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.10 ஆயிரம்! கோவை வடக்கு வேட்பாளா் பிரசாரம்

தொகுதி அலசல் - குன்னம்: இழந்ததை மீட்க அதிமுக தீவிரம்

தொகுதி அலசல்: அரியலூரில் திமுக - அதிமுக மீண்டும் பலப்பரீட்சை!

திருச்செந்தூா் தொகுதி பாஜக வேட்பாளா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


