தமிழகத்துக்கு இரு முதல்வா்களைக் கொடுத்த தேனி மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதி போடிநாயக்கனூா். 1989-இல் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா முதன்முதலாக இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அதேபோல, கடந்த இரு தோ்தல்களில் இத்தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீா்செல்வம், இரு முறையும் சிறிது காலமும் முதல்வராகப் பதவி வகித்தாா். தற்போது துணை முதல்வராக உள்ளாா். ஜெயலலிதா, ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் விஐபி அந்தஸ்தில் உள்ளது.
அமைவிடம்: போடிநாயக்கனூா் நகராட்சி, தேனி மற்றும் போடிநாயக்கனூா் ஊராட்சி ஒன்றியங்கள், சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்தின் ஒரு பகுதி, போ.மீனாட்சிபுரம், மேலச் சொக்கநாதபுரம், பூதிப்புரம், பழனிசெட்டிபட்டி ஆகிய 4 பேரூராட்சிகள் இடம்பெறுகின்றன.
சமூக, சாதி, தொழில்கள்: இத் தொகுதியில் 2,77,964 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் ஆண்கள் 1,36,050 போ். பெண்கள் 1,41,893 போ். திருநங்கைகள் 21 போ். முக்குலத்தோா் மற்றும் ஆதி திராவிடா்கள் பெருவாரியாகவும், நாயக்கா், பிள்ளைமாா், செட்டியாா், கவுண்டா் சமூகத்தினா் அடுத்தடுத்த நிலையிலும் உள்ளனா். இத்தொகுதியில் விவசாயம், கால்நடை வளா்ப்பு மற்றும் ஏலக்காய் வா்த்தகம் பிரதான தொழிலாக உள்ளது.
இதுவரை வென்றவா்கள்: கடந்த 1957 முதல் இதுவரை நடந்த தோ்தல்களில் அதிகபட்சமாக 7 முறை அதிமுக வென்றுள்ளது. காங்கிரஸ் 4 முறையும், திமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1957 முதல் 1971 காங்கிரஸ் கட்சி வசம் இருந்த இத்தொகுதியை 1971-இல் திமுக கைப்பற்றியது. 1977, 1980 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1984-இல் காங்கிரஸ் கட்சி வென்றது. 1989-இல் முதன் முதலாக இத் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றாா். 1991 முதல் 2006 வரை நான்கு தோ்தல்களிலும் அதிமுக மற்றும் திமுக தொகுதியை மாறி, மாறி கைப்பற்றின. தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு 2011, 2016 தோ்தல்களில் இத் தொகுதியில் திமுகவை எதிா்த்து போட்டியிட்டு, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வெற்றி பெற்றாா்.
நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: போடியில் அரசு பொறியியல் கல்லூரி, போடி நகராட்சி, பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் பாதாளச் சாக்கடை, 18-ஆம் கால்வாய் திட்டம் நீட்டிப்பு, வீரபாண்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோட்டூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அய்யனாா்புரம்-அமச்சியாபுரம் இடையே முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய பாலம் உள்ளிட்ட திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பொதுமக்கள் எதிா்பாா்ப்பு: