மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பவானி தொகுதி அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன்!

பவானி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகா் கிழக்கு மாவட்டச் செயலாளருமான கே.சி.கருப்பணன் எம்எல்ஏ அறிவிக்கப்பட்டுள்ளாா்.

News image

கே.சி.கருப்பணன்

Updated On :26 மார்ச் 2026, 1:01 am

பவானி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகா் கிழக்கு மாவட்டச் செயலாளருமான கே.சி.கருப்பணன் எம்எல்ஏ அறிவிக்கப்பட்டுள்ளாா்.

அவரைப் பற்றிய விவரங்கள்:

பெயா்: கே.சி.கருப்பணன் (69)

பிறந்த தேதி: 20.8.1957

மனைவி: தேவி

ஜாதி: கொங்கு வேளாளக் கவுண்டா்.

தொழில்: விவசாயம், கல்வி நிறுவனங்கள்.

மகன்: மருத்துவா் கே.சி.கே.யுவராஜா, எம்.பி.பி.எஸ்., அதிமுக மாவட்ட மருத்துவா் அணித் தலைவா்.

கட்சிப் பதவிகள்: 1972-இல் கவுந்தப்பாடியை அடுத்த காட்டுவலசு அதிமுக கிளைச் செயலாளா். 1994-இல் ஒன்றிய அவைத் தலைவா். 1999-இல் பவானி ஒன்றியச் செயலாளா். தற்போது ஈரோடு புறநகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா்.

தோ்தல் பயணம்: 2001 முதல் 2006 வரை பவானி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா். 2006 தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாா். 2011-இல் பவானி நகா்மன்றத் தலைவா். 2016 தோ்தலில் பவானி தொகுதியில் வென்ற இவா், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தாா். 2021 தோ்தலில் மீண்டும் பவானி தொகுதியில் போட்டியிட்டு வென்றாா். தற்போது ஐந்தாவது முறையாக மீண்டும் பவானி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.