மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகாராஜன் மீண்டும் போட்டியிடுவாரா? அவரை எதிர்த்து யார் களமிறக்கப்படுவார்? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
மதுரை நகரின் இதயப் பகுதிகளைக் கொண்டது மதுரை மத்தியத் தொகுதி. உலகப் புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோயில், ஆதி சொக்கநாதா் கோயில், பெரியாா் பேருந்து நிலையம், ரயில் நிலையம், மதுரை மாவட்ட மத்திய நூலகம் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தவை. மூத்த தலைவா்கள் பழ.நெடுமாறன், பி.டி.ஆா். பழனிவேல்ராஜன் ஆகியோா் இத்தொகுதியில் இருந்து பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
2016 மற்றும் 2021 தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட பி.டி.ஆா். பழனிவேல்ராஜன் மகன் பழனிவேல் தியாகராஜன், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறாா். தமிழ்நாடு அமைச்சரவையில் நிதித்துறை, தகவல் தொழில்நுட்பத் துறைகளின் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
தொகுதி மக்களுக்கு செயல்திறன் அறிக்கையை சமர்ப்பித்த ஒரே சட்டப்பேரவை உறுப்பினராக பழனிவேல் தியாகராஜன் இருக்கிறார். இவரது இந்த முயற்சி தொகுதி மக்களிடையே மிகப்பெரிய வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அமைந்தது.
இருப்பினும், சமீபத்தில் மதுரை மாநகராட்சியில் நடந்த வரி மோசடி விவகாரத்தில் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் தனி உதவியாளர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று அவர் அறிவித்தாலும், மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
திமுக சார்பில் மதுரை மத்திய தொகுதியில் மீண்டும் போட்டியிட பழனிவேல் தியாகராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த முறை அதிமுக நேரடியாக மதுரை மத்திய தொகுதியில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னனை வேட்பாளராக இருந்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த 2016 தேர்தலில் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர் ஜெயபாலை மீண்டும் களமிறக்கவும் திட்டம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Who are the candidates for Madurai Central constituency?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக அரசு பாரபட்சத்துடன் செயல்படுகிறது: பழனிவேல் தியாகராஜன்

மதுரை மத்தியம் தொகுதி திமுக வேட்பாளா்

குஷ்புவைத் தொடர்ந்து சுந்தர். சி! மதுரை மத்திய தொகுதியில் போட்டி!

மதுரை மத்திய தொகுதி: ஹாட்ரிக் அடிப்பாரா பழனிவேல் தியாகராஜன்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

