தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

ஆதரவு கட்சித் தலைவர்களுடன் ஆளுநரைச் சந்தித்த விஜய்!

தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆதரவு கட்சித் தலைவர்களுடன் சென்று வழங்கினார்.

News image

ஆதரவு கட்சித் தலைவர்களுடன் ஆளுநரைச் சந்தித்த விஜய் - X

Updated On :9 மே 2026, 7:47 pm IST

தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இன்று (மே 9) மாலை சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்தை வழங்கியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாகத் 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை அவர்கள் பெறவில்லை. அவர்களுக்கு ஆதரவளிக்க திமுக கூட்டணியில் 5 எம்.எல்.ஏ.க்களை வென்ற காங்கிரஸ் கட்சி முதலில் ஆதரவு தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் தலா 2 இடங்களை வென்ற இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பின் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை எண்ணிக்கை கிடைத்ததால் ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்தை இன்று ஆளுநரிடம் விஜய் வழங்கினார்.

ஆளுநர் மாளிகைக்கு அவருடன் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலரும் சென்றுள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் தலைவர்கள் பிரவீன் சக்கரவர்த்தி, கிரிஷ் சோடங்கர், விசிக எம்.எல்.ஏ. வன்னி அரசு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ.க்கள் இருவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் விஜய் உடன் இன்று ஆளுநர் மாளிகைக்குச் சென்றுள்ளனர்.

தவெக சார்பில் ஆனந்த, ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆட்சியமைக்க உரிமை கோரி ஏற்கெனவே 3 முறை ஆளுநரைச் சந்தித்து ஏமாற்றத்துடன் திரும்பிய விஜய்யின் 4-ஆவது சந்திப்பு வெற்றிகரமாக நிகழ்ந்துள்ளது.

தற்போது தவெகவுக்கு(107), காங்கிரஸ்(5), இந்திய கம்யூனிஸ்ட்(2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லீம் லீக்(2) என மொத்தம் 120 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Vijay Meets Governor with Leaders of Supporting Parties

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.