தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆதவ் அர்ஜுனா நன்றி தெரிவித்துள்ளார்.

News image

திருமாவளவன் - ஆதவ் அர்ஜுனா - file photo

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

தவெக ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆதவ் அர்ஜுனா நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 107 தவெக உறுப்பினர்களுடன் 5 காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா இரண்டு கட்சிகள் என 116 உறுப்பினர்களுடன் தவெக கடந்த ஒரு சில நாள்களாக ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை என்ற 118 பலத்தைப் பெறப் போராடி வந்தது.

இதற்கிடையே, விடுதலைச் சிறுத்தைகள் இன்று மாலை 4 மணியளவில் தன்னுடைய நிபந்தனையற்ற ஆதரவை அளித்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவுக் கடிதத்துடன் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் பேசினார். ஜனநாயகம் காக்கப்படும், மக்களுடைய ஆதரவுடன் தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேப்பார் என்று அவர் கூறினார்.

திருமாளவனுக்கு நன்றி தெரிவித்தன் மூலம் அரவது கட்சியின் ஆதரவை உறுதி செய்துள்ளார் ஆதவ் அர்ஜுனா. ஆதரவு தந்த இரு கம்யூனிஸ்ட்டு கட்சிகள் மற்றும் ஆசான் திருமாவளவனுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார் ஆதவ் அர்ஜுனா.

இன்னும் சற்று நேரத்தில் ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க விஜய் உரிமைக் கோர உள்ளார்.

Summary

Adhav Arjuna has expressed his gratitude to the Viduthalai Chiruthaigal Katchi for extending its support to the Tamilaga Vettri Kazhagam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.