காங்கிரஸ் கட்சிக்கு திமுக கண்டனம்!பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

தவெகவுக்கு ஆதரவா? 24 மணிநேரத்தில் முடிவு! - சிபிஎம் எம்.ஏ. பேபி

தவெகவுக்கு ஆதரவு குறித்து சிபிஎம் பொதுச் செயலர் பேபி விளக்கம்...

News image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி - கோப்புப்படம்

Updated On :4 மணி நேரங்கள் முன்பு

தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிப்பது குறித்து 24 மணி நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக ஆட்சி அமைக்க பிற கட்சிகளின் 11 உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் (5) நேற்று ஆதரவு அளித்தது.

மேலும், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தலா 2 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், அவர்களின் ஆதரவைக் கோரி தவெக கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், தில்லியில் செய்தியாளர்களின் கேள்விக்கு விளக்கம் அளித்த எம்.ஏ. பேபி தெரிவித்திருப்பதாவது:

”தவெக தனிப்பெரும் கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்யை தமிழ்நாடு ஆளுநர் அழைக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஜனநாயக மரபுகளை ஆளுநர் பின்பற்ற வேண்டும்.

எங்கள் கட்சி திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகின்றது. கூட்டணிக் கட்சிகள் ஒருமித்த கருத்துகளை எட்டும் நோக்கில் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். தவெகவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக 24 மணி நேரத்துக்குள் முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

சற்று முன்னதாக, சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து முடிவெடிக்க இந்த மூன்று கட்சிகளின் செயற்குழுக் கூட்டமும் நாளை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Support for TVK? Decision in 24 Hours! — CPM's M.A. Baby

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.