விசிகவைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் சிலர் கூட்டணிக் கட்சிகளுக்காக தேர்தல் பணியாற்றவில்லை என அந்தக் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் 85 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், வரும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. ஆகையால், தமிழக அரசியல் களமே மே 4 ஆம் தேதியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் விடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் பேசியிருப்பதாவது:
“நம்முடைய கட்சியின் சார்பில் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் பணிக்குழு நியமனம் செய்யப்பட்டன. ஆங்காங்கே தோழர்கள் தொகுதி வாரியாக கட்டுக்கோப்பாக இருந்து சிறப்பாகப் பணியாற்றி இருக்கின்றனர். ஆனால், ஒரு சில தொகுதிகளில் இவ்வாறு நடக்கவில்லை.
ஒரு சில தொகுதிகளில், குறிப்பாக நாம் போட்டியிடாத பிற தொகுதிகளில் நம்முடைய தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தேர்தல் பணி ஆற்றியதில் தோழர்கள் சிலர் ஒற்றுமையாக இருந்து பணியாற்றவில்லை என்கிற தகவல்கள் வந்துள்ளன. இதுகுறித்து தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.
Summary
VCK leader Thol. Thirumavalavan has stated that some functionaries belonging to the party did not campaign for their alliance partners during the elections.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
திமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்

விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற திமுகவே காரணம்: தொல் திருமாவளவன் பேச்சு
இபிஎஸ்ஸுடன் இருப்பதைவிட இறப்பதே மேல்; ஆனால், இப்போது அதே கூட்டணியில்: யாரைச் சொல்கிறார் திருமாவளவன்?
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


