தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!

தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்காக உயர்த்தப்பட்டிருப்பது பற்றி...

News image

இந்திய தேர்தல் ஆணையம் - ANI

Updated On :31 மார்ச் 2026, 4:24 am

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாக்குச் சாவடி மற்றும் வாக்கு எண்ணிக்கை மையப் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் கண்காணிப்புக் குழுக்கள், 24x7 நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

30.03.2026 அன்றைய நிலவரப்படி, இக்குழுக்களால் ரூ. 61.98 கோடி ரொக்கம், ரூ. 1.17 கோடி மதுபானங்கள், ரூ. 8.30 கோடி போதைப் பொருள்கள், ரூ. 197.35 கோடி தங்கம், வெள்ளி பொருள்கள் உள்பட மொத்தம் ரூ. 296 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாக்குச் சாவடி பணியாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணியாளர்களின் ஊதியத்தை இருமடங்கு உயர்த்தி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஊதியம் ரூ. 1,700-ல் இருந்து ரூ. 3,000 ஆகவும், வாக்குப்பதிவு அலுவலர் ஊதியம் ரூ. 1,300-ல் இருந்து ரூ. 2,600 ஆகவும், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் ஊதியம் ரூ. 850-ல் இருந்து ரூ. 1,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், வாக்கு எண்ணும் உதவியாளருக்கு ரூ. 650-ல் இருந்து ரூ. 1,400 ஆகவும், நுண் பார்வையாளருக்கு ரூ. 1,000-ல் இருந்து ரூ. 2,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Story image

X / CEC TN

Summary

Election Workers' Wages Doubled! ECI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.