மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கே.என். நேரு, செங்கோட்டையன் வேட்புமனு தாக்கல்!

திமுக அமைச்சர் கே.என். நேருவும், தவெகவின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனும் வேட்புமனு தாக்கல்..

News image

செங்கோட்டையன் - DPS

Updated On :30 மார்ச் 2026, 7:37 am

திமுக அமைச்சர் கே.என். நேருவும், தவெகவின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையனும் இன்று(மார்ச் 30) வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

234 தொகுதிகளுக்கு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் சனிக்கிழமை (மார்ச் 28) அறிவிக்கப்பட்டன.

தவெக போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) அறிவிக்கப்பட்டன.

10-வது முறையாக தேர்தலில் போட்டியிடும் அமைச்சர் கே. என். நேரு திருச்சி மேற்கு தொகுதியில் களம் காண்கிறார்.

வேட்புமனு தாக்கல் செய்தபின் அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது தவெக தலைவர் விஜய்க்கு பயமாக இருக்கலாம். திருச்சி கிழக்கில் கண்டிப்பாக வெல்வோம், இந்த முறையும் திமுகவுதான் கதாநாயகன் இவ்வாறு அவர் கூறினார்.

அதேசமயம், தவெகவின் செங்கோட்டையன் ஈரோடு கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் விஜய் வேட்புமனுவை தாக்கல் செய்தார். வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Summary

DMK Minister K.N. Nehru and TVK Executive Committee Chief Coordinator Sengottaiyan filed their nomination papers today (March 30).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.