மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

11-வது முறையாக காட்பாடியில் போட்டியிடும் துரைமுருகன் இன்று வேட்புமனு தாக்கல்!

காட்பாடி தொகுதியில் போட்டியிட அமைச்சர் துரைமுருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

News image

வேட்புமனு தாக்கல் செய்தார் துரைமுருகன். - X

Updated On :6 ஏப்ரல் 2026, 8:37 am

காட்பாடி தொகுதியில் போட்டியிட அமைச்சர் துரைமுருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.

திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிடுகின்றார்.

இந்தத் தொகுதியில் கடந்த 1996 முதல் தொடர்ந்து எம்.எல்.ஏ. ஆக இருந்துவரும் இவர் அதற்கு முன்னர் 1971, 1984 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் அங்கு போட்டியிட்டிருந்தார். இவர் ராணிப்பேட்டையில் 2 முறையும், காட்பாடியில் 9 முறையும் வெற்றி பெற்றிருந்தார்.

இந்த நிலையில், காட்பாடி தொகுதியில் 11 வது முறையாக போட்டியிடும் துரைமுருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது மகன் கதிர் ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Summary

Duraimurugan, contesting from Katpadi for the 11th time, files his nomination today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.